Header Ads



''டளஸ் அழகப்பெரும அவர்களே'' முஸ்லிம்களிடம் பழி வாங்கும் எண்னம் இருக்காது''

-ஒலுவில் ஜெலில்-

முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப் பெரும் பெப்ரவரி 04 2015 திகதி சொல்லிருந்தார் முஸ்லிம்கள் பழி வாங்கி விட்டார்கள் என்று..!

நீங்கள் நினைப்பது போல் முஸ்லிம்கள் ஒன்றும் பழி வாங்குபவர்கள் அல்ல. யோசித்து சிந்தித்து செயல் படுபவர்கள் இஸ்ஸாம் மார்க்கம் கூட அப்படி பழி வாங்க சொல்லவில்லை அப்படி உங்கள் கண்களுக்கு தெரியலாம்.ஏன் என்றால் நீங்கள் இப்போது மரத்தில் இருந்து கிழே விழுந்தவன் மாதரி.அதற்காக தள்ளிவிட்டவர்கள் முஸ்லிம்கள் என்று நினைக்க வேண்டாம்.

உங்கள் மரம் உறுதியை இளந்து விட்டது என்றுதான் அர்த்தம் (மரம் என்று செல்வது முன்னால் ஜனாதிபதி) அமைச்சர் அவர்களே சிந்தித்து பாருங்கள் முதல் இரண்டு முறை முஸ்லிம்கள்(நான் உற்பட)முன்னள் ஜனதிபதிக்குத்தான் வாக்கு போட்டார்கள் இரவிலும்,பகலிலும் உழைத்தார்கள் ஆனாள் செய்த கைமாறு முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவை(BBS)உருவாக்கியது. 

முன்னால் அமைச்சர் டளஸ் அழகப்பெரும் அவர்களே நாங்கள் ஒன்றும் தனி நாடு கேட்கவில்லை,காட்டிகொடுக்க வில்லை நாட்டை,யுத்தம் செய்யமில்லை நாட்டுக்காக எத்தனையே தியாகம் செய்தவர்களின் முஸ்லிம்களுமுண்டு.எத்தனயே வரலாறு சொல்லுது.

இறைவன் (அல்லஹ்வின்) பெயரை! ஒரு மிருகத்தின் உருவத்தில் (அல்லஹ்வினால் விலக்கப்பட்ட பன்றி) எளுதி அதை வீதியால் இழுத்தி வந்து கடைசியில் தீ மூட்டி,பள்ளிகளை உடைத்து,வியாபார நிலயங்களை உடைத்து,உடைகளை கழட்டி (அபாயா)ஏன் உயிரைக்கூட எடுத்தார்கள் இப்படி அடிக்கிகொண்டோ போகலாம் எத்தனையோ.

இதையல்லாம் பார்த்துக்கொண்டு மொனியாக,குருடனாக,செவிடனாக எல்லொரும் ஒரு தாய் மக்கள் நான் யாரையும் பழிவாங்க விடமாட்டேன் என்று வாய் கிழிய கத்திவிட்டு முஸ்லிம் நடுகளுக்கு போய் நல்ல பெயர் வாங்கினதும்,கலிபா பட்டம் வாங்கினதும்தான் மிச்சம்.போதாக்குறைக்கு அஸ்வர்(MP) என்கிற ஒரு முஸ்லிம் பெயர்தாங்கிய வைத்துகொண்டு பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டினார்.ஆனால் எங்கள் சமுதாயம் என்ன கஷ்டப்பட்டிசி.தினம் தினம் கண்ணீர் வடிச்சி பயத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தது.இதையேல்லாம் உங்கள் தலைவர் பார்த்துக்கொண்ருந்தார் (POWER)இருந்தும் கதிரையில் இருந்தார். ஏன்?முஸ்லிம் என்ற ஒரு இனத்தை அழிக்க ஒடுக்க வேண்டும் என்றா?முடியாது அல்லாஹ் நாடினால் மட்டும் முடியும்.

எத்தனையே தாய் மார்கள்,பிள்ளைகள் நோன்பு பிடித்து தொழுது எத்தனையோ தடவை துஆ செய்தார்கள்.ஆட்சியாளனுக்கேல்லாம் ஆட்சியாலன் ஒருவன் இருக்கிறான் என்பதை உங்கள் தலைவர் மறந்துவிட்டார் (தெரியாதோ இல்லையோ பாவம் அஸ்வர் கூட சொல்லி கொடுக்கவில்லை போல) அதனால்தான் எல்லா சமுகமும்.குறிப்பாக முஸ்லிம்கள் ஒரு மாற்றம் வோண்டும் நின்மதி வோண்டும் எங்கள் மார்க்கம் காட்டி தந்த முறைப்படி வாழ வோண்டும் என்றுதான் புதிய ஜனதிபதியை வெற்றிபெற செய்தார்கள்(இறைவன் துஆவை அங்கிகரித்துவிட்டான் போல)நீங்கள் நினைப்பது போல் முஸ்லிம்கள் பழி வாங்கவில்லை,நேரம் வரும்வரை காத்துக்கொண்டிருகவுமில்லை அந்த நேரத்தை உருவாக்கியது உங்கள் தலைவர்தான்.அதை பயன் படுத்தி சிந்தித்து முறைப்படி முடிவை எடுத்தார்கள்.அதுதான் காலத்தின் தோவை கூட இருந்தது.

எப்படித்தான் உயரப்பறந்தாலும் எத்தனை தூரம் சென்றாலும் எல்லையை மீறினால் விழுந்து நாசமாகும். அதுதான் இன்றய நிலைமை உங்கள் தலைவர் நிலைமை!  முஸ்லிம்களிடம் ஒரு நாளும் பழி வாங்கும் எண்னம் இருக்காது அப்படி பட்டவன் முஸ்லிமாக இருக்க மாட்டான்.எனவே தயவு செய்து அப்படி ஒரு எண்ணம் முஸ்லிம்களைப் பத்தி உங்கள் மனதில் இருந்தால் அதை எடுத்து விடுங்கள்.
முஸ்லிம்களில் ஒருத்தன்.

2 comments:

  1. Please translate this and send to him for his comments because this very good reply.

    ReplyDelete

Powered by Blogger.