Header Ads



மைத்திரியின் இந்திய விஜயத்துக்கு பெருமை சேர்க்கவே, இலங்கைக்கு இந்தியாவின் 'ஒன் அரைவல் வீசா'

முன்கூட்டியே வீசா பெற்றுக்கொள்ளாது, இந்திய விமான நிலையத்தில் வீசாவை பெற்றுக்கொள்ளும் வகையிலான 'ஒன் அரைவல் வீசா'வை (வருகை வீசா) இலங்கையர்களுக்கும் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு இந்தியா இந்த சலுகையை வழங்கியிருந்த போதிலும் அல் கொய்தா, தலீபான் போன்ற வாதிகள், இலங்கையைக் களமாகப் பயன்படுத்தி இந்தியாவுக்குள்  ஊடுறுவக்கூடும் என்ற அச்சம் காரணமாக இலங்கைக்கு அதற்கான வாய்ப்பு இதுவரை காலமும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இலங்கையில் அட்சிக்கு வந்துள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்தியாவினால் 'ஒன் அரைவல் வீசா' வழங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், எதிர்வரும் காலங்களில் இலங்கையர்கள் முன்கூட்டியே வீசா பெற்றுக்கொள்ளாது, இந்திய விமான நிலையத்தில் வீசாவை பெற்றுக்கொள்ள முடியும்.

முதல் கட்டமாக இலங்கையின் அரசாங்க அதிகாரிகளுக்கு இந்த வீசா வழங்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக அனைத்து இலங்கையர்களுக்கும் இந்த 'ஒன் அரைவல் வீசா' வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.