Header Ads



கொழும்பு அல்-ஹிக்மா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

கொழும்பு-12 வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியின் 2015ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் குறூப் 2010 பழைய மாணவர்களின் அனுசரணையுடன் இன்று (16) சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் பாடசாலையின் அதிபர் கே.எம்.எம். நாளிர் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.

மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக விரோ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பைஸல் புஹாரியும், கௌரவ அதிதிகளாக அக்ரம் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மொஹமட் அக்ரம் உள்ளிட்ட அதிதிகளும், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது 254.5 புள்ளிகளைப்பெற்று முதலாம் இடத்தை மினா இல்லம் பெற்று சம்பியன் வெற்றிக் கேடயத்தையும், 245 புள்ளிகளைப்பெற்று கிரா இல்லம் இரண்டாம் இடத்தையும், 224.5 புள்ளிகளைப் பெற்று ஷபா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.





No comments

Powered by Blogger.