Header Ads



மஹிந்த ராஜபக்ஸ, அனுப்பிவைத்துள்ள கடிதம்

எந்தவிதமான விமர்சனங்கள், அவமதிப்புக்கள் மற்றும் ஓரங்கட்டல்களுக்கு மத்தியிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையோ  அல்லது கட்சி ஆதரவாளர்களையோ எந்த சூழ்நிலையிலும் கைவிட்டுச் செல்லப்போவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.  

பத்தரமுல்லையில் கடந்த சனிக் கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனமைக்கான காரணத்தை இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள  மகிந்த ராஜபக்ஷ, 

சுதந்திரக் கட்சியின் பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தமக்கிருந்த ஏனைய சில உறுதியளிப்புகளின் நிமித்தம் தன்னால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  கடந்த சில தசாப்தங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி முகங்கொடுக்க நேர்ந்திருந்த சில பிரதான நிகழ்வுகளைக் கோடிட்டு காட்டியுள்ள மகிந்த ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது பல்வேறு குற்றச்சாட்டுகளிலிருந்தும் கட்சியினரைப் பாதுகாக்க தான் எப்படி போராடினார் என்பதையும் விபரித்துள்ளார். 

 "சகல நேரங்களிலும் சுதந்திரக் கட்சியின் பின்னணியில் இருந்த ஏனைய கூட்டணி   கட்சிகளைப் பாதுகாக்க வேண்டியது சுதந்திரக் கட்சியின் முதன்மையான பொறுப்பாகும்' என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ஷ , "சுதந்திரக் கட்சியானது ஒரு கட்சி என்ற வகையில் அக்கட்சியும் அதன் அங்கத்தவர்களும் அச்சுறுத்தலின் கீழிருக்கும்போது எப்போதும் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம்' என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 "கட்சியையும் அதேபோல அதன் உறுப்பினர்களையும் பாதுகாப்பதற்கான பொறுப்பை புதிதாக தெரிவுசெய்யப்பட்ட சுதந்திரக் கட்சியின் தலைவர்   மைத்திரிபால சிறிசேனவும் அதேபோல் ஏனைய பதவிகளை வகிப்போரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். உள்ளிருந்தும் வெளியிலிருந்துமான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், அவமதிப்புக்கள் மற்றும் ஓரங்கட்டல்களை உலகின் ஆபத்தான பயங்கரவாதிகளையும் அதேபோல் சர்வதேச சூழ்ச்சிகளையும் எதிர்கொள்ள முடிந்திருந்தவன் என்ற வகையில் என்னால் தாங்கிகொள்ள முடியும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கட்சிக்காகச் செய்ய வேண்டிய எதையும் எதிர்காலத்தில் தான் செய்வார் என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, "நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் மீண்டும் வெற்றிபெறவேண்டும். அதற்காக நான் எனது கடமையைச் செய்யத் தயாராக இருக்கின்றேன்' என்றும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.