Header Ads



ஜோர்டானியர்கள் யார் என்பதை ''இஸ்லாமிய தேசம்'' இனிமேல்தான் புரிந்துகொள்வார்கள்''

ஐ.எஸ். க்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படை தலைமையில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் ஜோர்டான் நாடும் பங்கேற்று வருகிறது.

 தொடர்ந்து சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயிற்சி முகாம்கள், பதுங்குமிடங்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் மீது நேற்று சரமாரி வான்வழி தாக்குதல்களை நடத்தியது. முதல் முறையாக ஈராக் நாட்டிலுள்ள  நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்நாட்டு தொலைக்காட்சியில் இத்தாக்குதல் நடத்தப்படும் வீடியோ காட்சிகளை ஒளிபரப்பிய ஜோர்டான் அரசு, இது திருப்பியடிக்கும் நேரம் என்று கூறியுள்ளது.

12-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் நிலைகள் மீது சரமாரியாக குண்டுமழை பொழிந்தன. தாக்குதலுக்கு பின் போர் விமானத்தை இயக்கிய விமானிகள், IS ல் கொல்லப்பட்ட விமானி கசாஸ்பெவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அந்நாட்டு ராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் 'இது ஆரம்பம் மட்டும் தான். ஜோர்டானியர்கள் யார் என்பதை நீங்கள் இனிமேல் தான் புரிந்துகொள்வீர்கள்' என்று ஐ.எஸ். க்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இனி தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் வரை தாக்குதல் தொடரும் எனவும் ராணுவம் சூளுரைத்துள்ளது. இந்நிலையில் ISகளால் கொல்லப்பட்ட விமானி கசாஸ்பெவின் வீட்டுக்கு சென்ற மன்னர் இரண்டாம் அப்துல்லா, கசாஸ்பெயின் தந்தைக்கு ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.