Header Ads



''வைத்தியரும் கண்டு பிடிக்காமலிருக்கலாம்''

இங்கிலாந்தை சேர்ந்த சாதி ரான்ஸ் என்ற இளம்பெண் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர் ‘இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம்’ (ஐபிஎச்) எனும் குடல் நோய் இருப்பதாக சொல்லி சில மருந்துகளைக்கொடுத்தார். 

சில மாதங்களாக மருத்துவர் கொடுத்த மருந்தை சாப்பிட்டு வந்த போதும் வயிற்று வலி நீடித்ததால் சந்தேகமடைந்த சாதி ரான்ஸ், மருத்துவரிடம் திரும்ப சென்றுள்ளார். அவரோ, இது உணவுப்பழக்கத்தால் வரக்கூடிய சாதாரண நோய் தான் என்றார். 

மருத்துவரின் பதிலால் திருப்தியடையாத சாதி ரான்ஸ், கூகுளில் தனக்கு உள்ள பாதிப்புகளை வைத்து என்ன நோய் என்று தேடினார். அதில் தனக்கு உள்ள அறிகுறிகள் கர்ப்பப்பை புற்று நோய்கான அறிகுறிகளோடு முழுமையாக ஒத்துப்போவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் மருத்துவரிடம் அவராகவே சில சோதனைகளை செய்யும்படி கேட்டுக்கொண்டார். சோதனை முடிவுகளில் அவருக்கு புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நோய் கண்டுபிடிக்கப்பட்ட போது அவரது கர்ப்பப்பையில் தர்பூசணி அளவிற்கு பெரிய கட்டி இருந்தது. அறுவை சிகிச்சை மூலம் அந்தக்கட்டி நீக்கப்பட்டாலும், கர்ப்பப்பையில் தாக்கிய புற்றுநோய் குடல், நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயம் வரை பாதித்திருப்பது தெரியவந்தது. இது நடந்தது 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்.

சாதியின் கணவர் ஜேசான் இருவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டவர். சாதியின் மருத்துவ சிகிச்சைக்காக இதுவரை 35,000 பவுண்ட் (ரூபாய் 33 லட்சம்) செலவழித்துள்ளார். உண்மையில், இந்த சம்பவத்திற்கு பிறகு ஜேசான் தன்னை இன்னும் அதிகமாக நேசிப்பதாக சாதி கூறியுள்ளார்.

தற்போது லண்டனில் உள்ள ராயல் மார்ஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாதி, இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள்தான் உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை பொருட்படுத்தாத சாதி, தன் கணவர் ஜேசானை ஒவ்வொரு நொடியும் தீவிரமாக காதலித்து தன் வாழ்நாளை நீட்டித்து வருகிறார். 

நேசத்தில் மரணம் என்பது ஏது?

No comments

Powered by Blogger.