Header Ads



இவ்வருட சுதந்திரதினத்தன்று புதிய அரசின் தலைவர்கள் மீது, தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டதா..?

-Gtn-

இலங்கையின் இவ்வருட சுதந்திரதினத்தன்று புதிய அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டதாக ஆங்கில வார இதழொன்று தகவல் வெளியிட்டுள்ளது-

அது மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையின் இந்தவருட சுதந்திரதினத்திற்கு முன்னதாக  அரசாங்கத்தின் முக்கிய  தலைவர்கள் சிலரின் மீது மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் குறித்து புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவிற்கு எச்சரித்திருந்த விடயம் இந்த வாரம் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களின் கவனத்தை பெற்றிருந்தது.

பாராளுமன்றத்திற்கு வெளியே இராணுவ அணிவகுப்பு மரியாதையை பார்வையிடும்வேளை முக்கிய அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்றே ஜனாபதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

1981 ம் ஆண்டு எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் இவ்வாறு இராணுவ அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டுக்கொண்டிருந்த வேளையே சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பசநாயக்காவிற்கே முதலில் இந்த தகவல் கிடைத்துள்ளது.அவர் இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரியப்படுத்தியதுடன் உடனடிபதில் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

எதிர்பாரத சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதை தடுப்பதற்காக உடனடிநடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் யாh இலக்குவைக்கப்பட்டனர், யாரால் இலக்குவைக்கப்பட்டனர் போன்ற விபரங்களை அரச வட்டாரங்கள் வெளியிடவில்லை. எனினும் இந்த தகவல்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவைபோல காணப்படுவதாக அவை குறிப்பிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.