Header Ads



குடும்ப அரசியலை பின்பற்றப் போவதில்லை - ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்

குடும்ப மரம் அல்லது குடும்ப வனம் தமது கொள்கை இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அப்படியான குடும்ப மரம் அல்லது குடும்ப வனம் ஒன்றை அமைக்க நினைத்திருந்தால் ஜனாதிபதியாக கடமை புரிவதற்கு முன்னர் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே அதாவது எனது 25 வருட அரசியல் வாழ்க்கையிலேயே அமைத்திருக்க முடியும்.

முழு நாடு மற்றும் கிராமங்களை தன்னுடையதாக எண்ணுவதோடு நாட்டு மக்கள் தனது உறவுகளாக எண்ணி நாட்டுக்காக அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறப்பிடமான யாகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

மேலும் கடந்த அரசாங்கம் பின்பற்றிய குடும்ப அரசியலை தாம் பின்பற்றப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை சகல மதகுருமார்களும் அடங்கிய ஆலோசனை சபை ஒன்றினை அமைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.