Header Ads



குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்யாதீர்கள்

அரசியல் கட்சிகள் தேர்தல்களுக்காக தங்களின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிக்கை ஒன்றை பெப்ரல் அமைப்பு தயாரித்துள்ளது.

இந்த அறிக்கை நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பௌத்த மஹாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டது.

அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை வேட்பாளர்களாக தெரிவு செய்யாமை உள்ளிட்ட 12 விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதி சகல அரசியல் கட்சிகளுக்கும் கையளிக்கப்படவுள்ளது.

1 comment:

  1. அப்படியென்றால் அடுத்த தேர்தலில் மகிந்தவுக்கு சிவப்புக் கொடி தானா?

    ReplyDelete

Powered by Blogger.