Header Ads



பலவந்தமாக, மக்கள் மனங்களில் இருந்து நீக்க முடியாது - மஹிந்த (வீடியோ)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர்களை பலவந்தமாகவும், மக்கள் மனங்களில் இருந்தும் நீக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இன்று இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டை ஐக்கியப்படுத்தியன் காரணமாக, தமக்கு எதிராக வாக்களிக்க வடகிழக்கு மாகாண மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார.

மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து, தாம் 24 மணித்தியாலங்களில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. உண்மைதான். உங்களை எப்படி அவ்வளவு சுலபமாக மறக்க முடியும்? நீங்களும் உங்கள் சகபாடிகளும் அந்தளவுக்கு மக்களை படாத பாடுபடுத்தியிருக்கின்றீர்கள்!

    ReplyDelete

Powered by Blogger.