Header Ads



'கோடாபய ராஜபக்ஷவுக்கு சலுகைகள், எதுவும் வழங்கப்படவில்லை' பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோஹன

- எம். எஸ். பாஹிம்-

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத களஞ்சியங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ மீண்டும் விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறார்.

விசாரணையின் போது அவருக்கு விசேட சலுகை எதுவும் வழங்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். பொலிஸ் தலைமைய கத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கோடாபய ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணை குறித்து வினவப் பட்டது. இதற்குப் பதிலளித்த அவர்.

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை மற்றும் பி.எம்.ஐ.சி.எச். ஆயுத களஞ் சியம் என்பவற்றிற்கு எவ்வாறு அனு மதி வழங்கப்பட்டது என விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பாதுகாப்பு அமைச்சே தங்களுக்கு அனுமதி வழங்கியதாக அவை தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளரை விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்ட போதும் அது குறித்து மேலும் தகவல் பெற அவகாசம் வேண்டுமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோரியிருந்தார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதற்கு அவகாசம் வழங்க வேண்டியது பொலிஸ் விசாரணைகளுக்கு உட்பட வழி முறை யாகும். விசாரணைக்காக சகலரும் பொலி ஸ¤க்கோ சி.ஐ.டி.க்கோ அழைக்கப்படுவது கிடையாது.

விசேட ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அது குறித்து விசாரணை நடத்துவதற்கு பொலிஸ¤க்கு அழைக் கப்படுவதுண்டு. மற்ற சமயங்களில் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்றே விசாரணை செய்யப்படும்.

இவ்வாறான தன்னியக்க ஆயுதங்களை வைத்திருக்க பாதுகாப்பு அமைச்சிற்கு அனுமதி வழங்க முடியுமா? அதற்கான அதிகாரம் பாதுகாப்பு அமைச்சிற்கு இருக்கிறதா? என்பது குறித்து விசா ரணை இடம்பெறுகிறது என்றார்.

No comments

Powered by Blogger.