முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திய ஞானசாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அசாத் சாலி
பொலிஸார் பொதுபல சேனாவின் செயற்பாடுகளுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் யாராவது இனவாத ரீதியில் செயற்பட்டால் அல்லது ஒரு இனத்துக்கு எதிராக அறிக்கைகளை விட்டால், ஒரு சமயத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்தினால் அவர்கள் சகலரையும் கைது செய்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தார்.
இந்தநிலையில், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பௌத்த மக்களையும் அசௌகரியங்களுக்கு உட்படுத்தும் வகையில், இன ஐக்கியத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் டிலான்த விதானகேயுடன் சேர்ந்து முன்னெடுக்கும் செயற்பாடுகள் என்ன என்பதை முழு நாடும் அறியும் ஒரு விடயம்.
இறுதியாக நடைபெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம் பெண்களின் ஆடை மற்றும் முஸ்லிம் ஆலோசனை சபை என்பவற்றைப் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி இழிவுபடுத்தியுள்ளார்.
டிலாந்தவையும், ஞானசார தேரரையும் தேடும் நடவடிக்கையைத்தான் பொலிஸார் தற்பொழுது முன்னெடுக்க வேண்டும்.
இவர்கள் நோர்வேயிடம் பணம் பெற்ற முறை, அமெரிக்காவுக்கு சென்ற முறை, தென்கொரியாவுக்கு சென்று பணம் எடுத்து வந்த முறை என்பன பற்றிய உண்மைகளை நான் வெளிப்படுத்தியுள்ளேன்.
இது குறித்து விவாதிக்க ஞானசார தேரரை அழைத்தால், என்னுடன் மாத்திரம் விவாதத்துக்கு தயாரில்லையென கூறுகின்றனர் என குறிப்பிட்டார்.
.jpg)
Where is our igp
ReplyDeleteWe had been patient at very crucial times when we were disgraced to the utmost
ReplyDeletelimit and the show they were planning to stage disappeared like dot coms ! We have
a long way to go with the new political development that is emerging with the
participation of all communities . Just a little more patience on our part will give the
new political culture a breathing space to deal with these anti-social and racist elements in a fitting way. Buddhists themselves have punished them. More will come out against them in the next coming months, Many Sinhalese are for a true change and once that gets kick started , these date-passed lot will have to hibernate !