Header Ads



பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, உங்களை தேடிவரவில்லை - றிசாட் பதியுதின்


முசலி பிரதேசத்தில் உள்ள 32 கிராம மக்களின் பிரச்சினைகளை மக்களிடம்  கேட்டு அறிந்து அதற்கான தீர்வினை பெற்று கொடுக்கும் நோக்குடன் அமைச்சர் றிசாட் பதியுதின் இன்று மாலை 3மணியலவில் காயக்குழி மிள்குடியேற்ற கிராமத்திற்கு சென்ற வேலை அமைச்சர் றிசாட் பதியுதின்டம் கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கையாக போக்குவரத்து நலன் கருதி பிரதான சந்தியில் பயணிகள் பஸ் தரிப்பிடம் ஒன்று,பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து பிரச்சினையாக உள்ள பாடசாலை முடிவடைந்த பின்பு மாணவர்களை ஏற்றி செல்ல இலவச பஸ் வசதி,விளையாட்டு மைதானம் மற்றும் இன்னும் பல தேவைகளை முன் வைத்தார்கள்.

அமைச்சர் தெரிவிக்கையில் கடந்த காலத்தில் உங்களுடைய காயற்குழி கிராமத்திற்கு என்னால் இயன்ற பல்வேறு பட்ட உதவிகளை செய்து உள்ளேன்.எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உங்களை தேடிவரவில்லை மக்கள் பிரநீதியாக நான் இருக்கின்றேன்.

அதனால் தான்  உங்கள் கிராமத்தை தேடி வந்து இருக்கின்றேன்.உங்களின் கோரிக்கையான பஸ் தரிப்பிடம்,பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாடசாலை நேரத்தில் மாணவர்களை ஏற்றி இறக்க பஸ் சேவை வசதி,இளைளுர்களின் விளையாட்டு திறமையினை ஊக்குவிக்க விளையாட்டு மைதானம் ஒன்றை மிக விரைவில் அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

2 comments:

Powered by Blogger.