பள்ளிவாசலுக்கு முன், மக்கள் உண்ணாவிரதம்.
-ஏ.எல்.றபாய்தீன்-
திருகோணமலை பட்டண பிரதேச சபையின் மு.கா.உறுப்பினர் ஏ.எல்.எம்.பஸீர் தலைமையில் வெள்ளமைணல் பிரதேசம் கருமலை ஊற்று வாழும் முஸ்லிம் மக்கள் இணைந்து அமைதியான முறையில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8மணிமுதல் உண்ணவிரதத்தில் அமர்கின்றனர். மு.கா. தலைவரரும் அமைச்சருமான றவுப்ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலைக்கு வருகை தருவதால் தலைவர் தமது பிரதேசத்துக்கு வருகை தரும் போது தமது கோரிக்கைக்கு செவிசாய்த்து 100 நாள் வேளைத் திட்டத்தின் கீழ் தமது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென பிரதெச சபை உறுப்பினர் பஸீர் சற்று முன்னர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
1 கருமலை ஊற்று பள்ளிவாசலுக்குரிய மீதமுள்ள காணி; தரப்படவேண்டும்
2. கருமலைஊற்று மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்திலிருந்து விமாணப்படை அகற்றப்பட வேண்டும்.
3 உல்லாசப்பயணிகளினால் வெகுவாகக் கவரப்படும் .மாபில் பீஜ் விமாணப்படையின் கட்டுப்பாடடில் உள்ளது.இதனை சிவில் சமுக அமைப்புக்கோ அல்லது.பிரதேச சபைக்கோ அல்லது உல்லாசத்துறை அமைச்சுக்கோ கையளிக்கப்பட வேண்டும்.
4.மாபில் பீஜ் சுற்றளவு 603 ஏக்கர் சீன்குடா விமாணப்படைக்கு முன்னால் பாதுகாப்பு அமைச்சினால் 2012 ம்ஆண்டு சுவீகரிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.இதை இரத்துச் செய்யப்பட வேண்டும்.
5.சுதந்நதிரமாக மீனவர்கள் தொழில் செய்வதற்கான ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.
.jpg)
Post a Comment