தைக்காநகர் அபிவிருத்தி மன்றத்தின் QATAR கிரிக்கெட் சுற்றுப்போட்டி
அஸ்ஸலாமு அழைக்கும்
TDF அமைப்பின் நிதி வளர்சிக்காக நடாத்தப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டி 06-02-2015 முதல் 20-02-2015 வரை நடைபெற்றது. 19 கழகங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று மாலை (20-02-2015) Barwa மைதானத்தில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டிக்கு TDF அணியினரும் அதை எதிர்த்து KESI அணியினரும் மோதினர். இறுதியாக TDF அணியினர் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டனர்.
இவ் இறுதிப்போட்டிக்கு சிறப்பு அதிதியாக மௌலவி இஸ்ஸதீன் அவர்கள் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
இச் சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டகாரராக TDF அணியிலிருந்து NIHMATULLAH அவர்களும், சிறந்த பந்து வீச்சாளராக TDF அணியிலிருந்து N.M. SIYAM அவர்களும், இறுதிப்போட்டியின் சிறப்பாட்டகாரராக KESI அணியிலிருந்து HASSAN அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இச் சுற்றிப்போட்டிக்கான வெற்றி கிண்ணங்களுக்கு முழு அனுசரைனை M.N. அப்துல் மதீன் அவர்களும், நிதி உதவியாக இஸ்ஸதீன் மௌலவி மற்றும் சகோதரர் ஹனிபா அவர்களும் வழங்கி உதவி செய்தனர். அவர்களுக்கு TDF அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு இச் சுற்றுப்போட்டியினை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு சகல வழிகளிலும் அயராது பாடுபட்ட எமது மதிப்பிற்கும் மேன்மைக்குரிய TDF அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் விசேட நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு மற்றும் ஆதரவாளர்கள் மற்றும் பங்குபற்றிய அனைத்து கழகங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
தைக்காநகர் அபிவிருத்தி மன்ற சுற்றுப்போட்டி ஏற்பாட்டுக்குழு


Post a Comment