Header Ads



இலங்கையில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு வந்துள்ள தென்னாபிரிக்க அழகி


இலங்கையில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் இயற்கையை பேணுவதுடன், சுற்றுலாத்துறையினை முன்னோக்கி செயற்படுத்துவோம் என்ற செயற்பாட்டு நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

"ஒரு மில்லியன் மரத்தின் கதைகள்" என்ற தொனிப்பொருளின் கீழ் விளையாட்டு அமைச்சில் இந்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 2014/2015 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தினை பெற்ற ரோலினி ஸ்ரொரஸ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் மக்கள் மத்தியில் நாட்டினை ஆரோக்கியமாக பேணுவதுடன் சுற்றுலாத்துறையினை முன்னோக்கிச் கொண்டு செல்லுதல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஒரு மில்லியன் மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக குருநாகல் மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அம் மாவட்டத்திலுள்ள இரண்டு பெரிய நீர் நிலைகள் தெரிவு செய்யப்பட்டு அதன் மூலம் நீர்ப்பாசன வேலைகள் இடம்பெறவுள்ளது.

இந்தப் புதிய திட்டமானது, மக்கள் மத்தியில் மரங்களின் பயனை எடுத்துரைத்து அவர்கள் மூலமாக மரக்கன்றுகளை பயிரிட்டு, அதன் பின்னர் பராமரிப்பு வேலைகளிலும் ஈடுபடவுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் ரொகந்த அத்துகோரள தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க உரையாற்றும் போது,

சுமார் 30 வருட கால போரினால் ஏற்பட்ட அழிவுகள் இழந்த சுற்றுலாத்துறை தற்போது முன்னிலை வகித்து வருகிறது. கடந்த வருடத்தில் மட்டும் 1.5 மில்லியன் சுற்றுலாத்துறை பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையை இதை விட அதிகரித்து இவ்வருடத்தில் 2 மில்லியன் சுற்றுலா பயணிகளை எதிர்பார்ப்பதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க இங்கு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய உலக அழகி ரோலினி ஸ்ரொரஸ், இலங்கையின் இப்புதிய நடவடிக்கையை முன்னிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் சர்வதேச ரோட்டரி கழகத்தின் துணைத்தலைவர் சிலியா கிரஸ் டி ஜியே, ரோட்டரி மாவட்ட செயலர் கௌரி ராஜன், அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம்.ரபீக் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.