Header Ads



குருனாகல் முஸ்லிம் பாராளுமன்ற பிரநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் - றிஷாட் பதியுதின்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான றிஷாட் பதியுதின் நேற்று மாலை குருனாகல் மாவட்டத்தில் உள்ள கெக்குனுகொல்ல மற்றும் குருனாகல் நகரம் ஆகிய இடங்களில் உள்ள கைத்தொழில் துறை பிரசித்தி பெற்ற உற்பத்தியாளர்கள் , கல்வியாளார்கள்,சமுக சிந்தனையாளர்களுடனான விசேஷட கலந்துறையாடல் இடம்பெற்றது.

அமைச்சர் றிஷாட் பதியுதின் தெரிவிக்கையில் குருனாகல் மாவட்டத்தில் ஒரு லச்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்ற வேலையிலும்  அலவிக்கு பின்பு இந்த மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கூட   பெற முடியாத நிலையில் எமது சமுகம் இருந்து வருவதை கடந்த கால அரசியல் எமக்கு பாடம் கற்றுதந்துள்ளது.

எதிர்காலத்தில் முகம் கொடுக்க இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் குருனாகல் மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற பிரநீதித்துவ பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அரசியல் கட்சி,பிரதேசவாதம் பாராமல் அணைவரும் ஒன்றாக சேர்ந்து முஸ்லிம் ஒருவருக்கு வாக்களித்தால் மட்டும் தான் எமது பாராளுமன்ற பிரநீதித்துவம் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

இன் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள்,கல்வியலாளர்கள்,பள்ளி தலைவர்கள் இன்னும் பல சமுக சிந்தனையாளர்கள் கலந்து கொண்டார்கள்

No comments

Powered by Blogger.