Header Ads



மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால, சவுதி அரேபியாவுக்கு கடிதம்

சவுதியரேபியாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பவுள்ளார்.

யெமன் நாட்டு பிரஜையொருவரை தாக்கி அவர் மரணத்துக்கு காரணமாகவிருந்ததோடு கொள்ளையிலும் ஈடுப்பட்ட மூன்று இலங்கையர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணதண்டனையை சவூதியரேபிய நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்துள்ளது. 

இந்நிலையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாளை மறுதினம் சவூதியரேபியாவுக்கு புறப்பட்டு செல்லவுள்ளார்.

இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குறித்த கடிதத்தை சவூதி அரசரை நேரடியாக சந்தித்து வழங்கவுள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

4 comments:

  1. Hi people if you want never happened those things in the future. Let them furnished.

    ReplyDelete
  2. Mr president could you release from srilanka prison who committed murder And robbery?

    ReplyDelete
  3. waste of time and energy

    ReplyDelete
  4. மன்னிப்பு வழங்கக் கோரி அரசாங்கப் பிரமுகர்களை அனுப்புவதில் எந்தப் பயனும் இல்லை. சொந்த நாட்டு குற்றவாளிகளே கொலை செய்யப்படுகின்றனர். கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் மன்னித்தாலே ஒளிய அங்கு மன்னிப்பென்ற பேச்சுக்கே இடமில்லை. அது தான் இஸ்லாமிய தீர்ப்பும். எமது நாட்டில் ஜனாதிபதியின் பிறந்த நாளைக்கும், வெசாக், பொசன், சுதந்திர தினங்களுக்கும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதால் பாதிக்கப்படுவது அநீதியிழைக்கப்பட்ட குடும்பமே.

    ReplyDelete

Powered by Blogger.