100 நாட்கள் வேலைத்திட்டம், ஒரு கட்சியின் கொள்கையல்ல, முழு அரசாங்கத்தினதும் கொள்கை - மைத்திரி
100 நாட்கள் வேலைத்திட்டம் ஒரு கட்சியின் கொள்கை அன்றி, முழு அரசாங்கத்தினதும் கொள்கை என்று உறுதியாகி இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் குறித்த மீளாய்வு கூட்டம் ஒன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
தற்போதும் 100 நாட்கள் வேலைத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மக்களின் வருமானத்தை அதிகரித்து, மக்களுக்கு நிவாரணத்தை வழங்க முயற்சிக்கப்படுகிறது.
அவற்றை ஜனநாயக அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Post a Comment