வெலே சுதாவின் போதைப்பொருள் களஞ்சியசாலை திறக்கப்படுகிறது
-Tm-
சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவினால் வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை மறைத்துவைத்திருக்கும் களஞ்சியசாலை, இன்று திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினராலேயே இந்த களஞ்சியசாலை திறக்கப்படவுள்ளது என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
சந்தேகநபரான வெலே சுதா, இலக்கம் 875 சிங்காரமுல்லை, பியகம வீதி களனி, என்ற விலாசத்திலேயே களஞ்சியப்படுத்தி வைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Post a Comment