அனுஷி ஜயவர்தனவினால், அதிகாரங்களை இழந்த அமைச்சர்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழுள்ள விடயதானங்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அதிகாரங்களே குறைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த11ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இதன்பிரகாரம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருக்கும் அவரிடம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள முக்கியத்துவமற்ற நான்கு துறைகளை மேற்பார்வை செய்யும், கண்காணிக்கும் பொறுப்புகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரி, ரணவிரு சேவா அதிகாரசபை, பாதுகாப்பு சேவைகள் பாடசாலை, தேசிய கடெற் படையணி ஆகிய துறைகளை மேற்பார்வையிடும் பொறுப்புகள் மட்டுமே, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவிடம் இருந்து முப்படைகளுக்கு பொறுப்பான விடயங்களை ஜனாதிபதி அவசரமாக நீக்கியுள்ளார்.
ருவான் விஜேவர்தனவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றும் அனுஷி ஜயவர்தனவின் ஒப்பந்தமே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அனுஷி ஜயவர்தன, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் நெருங்கிய உறவினராவார்.
கொழும்பு வர்த்தகர்கள் மத்தியில் பிரலமான பெயரை சம்பாதித்துள்ள அனுஷி, அமைச்சர் விஜேவர்தனவின் பிரத்தியேக செயலாளர் நியமிக்கப்பட்ட நாளில் இருந்து பிரபல ஆயுத விற்பனை நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளதாக பேசப்படுகிறது.
அனுஷியின் வர்த்தக பங்களாராக நிமல் குக் என்பவர் இருந்து வருகிறார். இவர் பிரபல நிறுவனம் ஒன்றில் பொறுப்பில் இருந்து வருகிறார்.
தரகு பணம் குறித்து மேலதிக தகவல்களை நிமல் குக்கிடம் பேசிக்கொள்ளுமாறு அனுஷி, ஆயுத விற்பனை நிறுவனங்களிடம் கூறியுள்ளார்.
அதேவேளை இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் இணைப்புச் செயலாளராக பணியாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொடவின் சகோதரர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஏற்படுத்திய அழுத்தங்களும், விஜேவர்தனவின் அதிகாரங்களை குறைக்க காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment