Header Ads



''இதுதான் காரணம்''

அரச மொழிப்பெயர்ப்பு சேவைகள் சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட  தேசிய தொழிற்சங்க சம்மேளன  மத்திய நிலையத்தின் தலைவர் கே.டீ.லால்காந்த,தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சித்துள்ளார்.

ஜனவரி மாதம் 8 ஆம் திகதியிலிருந்து அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக எவரும் கருதவேண்டாம்,  ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதாக கூறினர். அவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுமாயின் பாராளுமன்றத்தை கலைப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க  கூறினார். ஆனால் அவ்வாறு செய்யாமைக்கான காரணம், ஏப்ரல் 19 ஆம் திகதி , பாராளுமன்றத்திற்கு ஐந்து வருடங்கள் நிறைவுபெறுகின்றது.அதற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின் அங்குள்ள பெரும்பாலானவர்களுக்கு ஓய்வதியம் இல்லாதுபோவதுடன் மீண்டும் பாராளுமன்றத்துக்கு வருவதற்கான வாய்ப்பும் இல்லாது போகும் என, தெரிந்தமையினால் இவ்வாறு செயற்படுகின்றனர் என கே.டீ.லால்காந்த தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.