''நம் ஒவ்வெருவருக்கும், தாய்மொழி உண்டு''
-அமீன் எம் றிலான்-
உலகில் மொழியென்று இல்லாது போனால் ஒலி எழுப்பவும், நடிக்கவுமே வேண்டிருக்கும்
நவநாகரீக அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியில் முன்னேறியிருக்கும் மனிதன் தனது தேவைகள,; எண்ணங்களை பிறருக்கு எடுத்துக் கூறுவதற்கு ஒலியைப் பயன்படுத்தினான். ஒலி மொழியானது. மொழி சைகையானது. சைகையும் மொழியும் எழுத்து வடிவம் பெற்றது. எழுத்து இன, மத, கலாச்சாரத்தை கொண்ட வரலாறாகியது. கருத்து பரிமாற்ற ஊடகமான மொழி மனித உயிரைப் போன்றது. உயிரின்றி மனிதன் வாழ முடியாது. மனித வாழ்க்கை பொதுவாக மொழியின்றி அமையாது. உலகில் மொழி ஒன்று இல்லாமல் போயிருந்தால் ஒலி எழுப்பவும், நடிக்கவுமே வேண்டியிருக்கும். மனிதன் மொழி மூலம் பெற்றுக்கொண்ட அறிவுடன் எண்ணக்கருக்களை கொண்டு சிந்திக்க முற்படும் போது சிந்தனை தோன்றுகின்றன. சிந்தனை வாழ்க்கையின் அர்த்தத்தை வெளிபடுத்தி மனிதனை கூட்டாக சேர்ந்து வாழ வைக்கின்றது.
மனிதன் கூட்டு வாழ்க்கைக்கும் சமூக பாதுகாப்புக்கும் அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சிக்கு பிரதான கலத்தை அமைத்துக் கொடுத்தது மொழி என்றால் அது மிகையாகாது. மனித வாழ்க்கை முன்னேற்றத்துக்கு வித்திட்ட மொழியால் 15ஆம் நூற்றாண்டு கலப்பகுதியில் சர்வதேச மட்டத்தில் பலதரப்பட்ட குழப்பங்களும், அமைதியின்மையும் ஏற்பட்டது. உலகில் புழக்கத்தில் இருந்த 30,000 மேற்பட்ட மொழிகள் பல விதத்தில் பிரிந்துக் காணப்பட்டமையினால் 1948ம் ஆண்டு பாகிஸ்தான் நாடு மேற்கு, கிழக்கு பாகிஸ்தான் என இரண்டாக பிளவுப்பட்டு இருந்தது. அக்காலத்தில் பாகிஸ்தானின் ஆட்சியாளராக இருந்த அலிஜின்னா (பொது ஆளுனர்) அரசியலமைப்பின் மூலம் 1948ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம்; திகதி தனது நாட்டின் அரச கரும மொழியான உருதை உத்தியோகபூர்வ மொழியாகன பிரகனப்படுத்தினார்.
கிழக்கு பாகிஸ்தான் (பங்களாதேஷ்) மக்கள் இந்த அறிவித்தலை மறுத்தார்கள். கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தமது தாய் மொழியான வங்காள மொழியை அரச கரும மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என தொடர்ந்து நான்கு வருட காலமாக பலவித போராட்டங்களின் ஊடாக வலியுறுத்தினர். கிழக்கு பாகிஸ்தான் மக்களால் நியாயமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பாகிஸ்தான் அதிபர் நிராகரித்தார்;. வங்காள மொழியை தம் தாய்மொழியாக பிரகடனம் செய்ய வேண்டும் என டாக்கா பல்கலைக்கழக மாணவர்களால் 1952 பெப்ரவரி 21 அன்று டாக்காவில் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. பாகிஸ்தான் படையினருக்கும் மாணவர்களுக்கும் மத்தியில் இடம்பெற்ற போராட்டத்தில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். இப் பிரச்சினை காரணமாக கிழக்கு பாகிஸ்தான் 1971 மார்ச் 25ம் ஆண்டு பங்களாதேஷ் என சுதந்திர நாடானது.
பெரும்பாலான நாடுகளில் தங்களது உள்நாட்டு தேவைகளுக்கு ஏற்ப மொழிக் கொள்கைகள் அமுல்;படுத்தப்படுகின்றன. இதனால் அங்கு வாழ்கின்ற சிறு பான்மை சமூகங்களின் புறக்கணிப்புக்கும் அழிவிற்கும் உள்ளாகின்றன. பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரு மொழியை மக்கள் மீது திணிக் முடியாது. பல ஆட்சியாளர்கள் திணிக்க நடவடிக்கை எடுத்தார்கள். இந்த நிலை மேலும் வலுபெறாதிருக்க நமீபியா போன்ற சில நாடுகளால் ஐ.நா. யுனொஸ்கோ அமைப்பிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. யுனொஸ்கோ அமைப்பின் 30வது பொது கூட்டத்தொடரின் போது இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உலக மக்களால் பயன்படுத்தப்படும் மொழிகள் யாவற்றுக்கும் அவற்றின் பண்புகளை பாதுகாக்கவும், உரிய கௌரவத்தை அளிப்பதற்காகவும் சர்வதேச தாய்மொழி தினமாக பெப்ரவரி 21ம் திகதி அனுஷ்டிக்க வேண்டும் என 1990ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி யுனொஸ்கேவால் பிரகடனம் செயயப்பட்டது.
சர்வதேச தாய் மொழிதினம் பிரகடனம் செய்வதற்கு பிரதான காரணமாக அமையப்பெற்றது 1952 பெப்ரவரி 21ம் திகதி கிழக்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற சம்பவமாகும். ஒவ்வொரு மனித சமுதாயத்துக்கும் தாய் மொழியுண்டு. அது பாதுகாக்கப்பட வேண்டும் இதனால் உலகில் பல மொழி பேசும் மக்கள் மத்தியில் இணக்கப்பட்டையும் சமத்துவ ஒன்றுமையையும் கட்டியெழுப்புவதற்காக 2000ம் ஆண்டு முதல் சர்வதேச தாய் மொழி தினம் உலகளாவிய மட்டத்தில் கொண்டாடப்படுகின்றன.
பல்லின மக்களை கொண்ட நாடுகளில் தாய்மொழி, அரச கரும மொழி, இணைப்பு மொழி என மூன்று விதமாக பின்பற்றப்பட்டுவருகின்றன. பல் மொழி புலமை ஒவ்வொரு சமூகங்களுக்கும் மத்தியில் ஒருங்கிணைந்து வாழ்வதற்கும் எங்கு சென்றாலும் சுமூகமாக வாழ்வதற்கும் ஏற்புடையாதாக இருக்கிறது. மொழிக்கு அறிஞர்களால் பல்வேறு விதத்தில் வரைவிலக்கணம் கொடுக்கப்படுகின்றன. பொதுவாக ஒருவனின் தாய்மொழி என்பது அவன் பிறந்த பூமியோடும் வழும் சமூதாயத்தோடும் தொடர்பு கொண்டது. இதனாலாயே ஆய்வாளர்கள் இதற்கு தாய்மொழி என்கின்றனர்;. அதே போன்று அரச கரும மொழி என்பது எந்தவொரு நாட்டிலும் அந்நாட்டு குடிமக்களுக்கு அந்நாட்டின் அரசியல் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஒர் ஏற்பாடேயாகும்.
ஒருவன் தனது தாய் மொழியில் பேசுவதற்கும் கல்வி கற்பதற்கும், தொழில் புரிவதற்கும் ஏற்புடையவனாக இருக்கின்றான். எனவே அரச கரும் மொழியினை தெரிந்து கொள்வதன் மூலம் நபர் ஒருவர் தனது தேவைகளை மிக இலகுவில் பூர்த்தி செய்து கொள்கிறார்;. மேலும் மொழியால் உள்ளுரில் ஏற்படும் இனமுறுகளைத் தடுக்க அரச கரும மொழி துணை புரிகிறது.
இவ்விரு மொழிகளையும் போன்றே இணைப்பு மொழி உலகவாழ் மக்களால் மக்களின் தேவை கருதி பொதுவாக அதிகளவில் பேசக்கூடிய ஒன்றாகும். இன்று உலகில் ஆங்கிலம்; இணைப்பு மொழியாக எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இது மக்களின் நவீன, விஞ்ஞான அறிவை கற்றுக்கொள்வதற்கும் அவனது நாட்டின் புகழை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் தொழில் வாய்பினை பெறுவதற்கும் உதவி புரிகின்றது. இணைப்பு மொழியினை கற்பதன் மூலம் சர்வதேச ரீதியாக நடைபெறும் மாற்றங்களை உடனடியாக தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற விதத்தில் தமது நாளாந்த விடயங்களை செயற்படுத்திக் கொள்ள முடியும். மேலும் பிற நாடுகளிடம் இருந்து தமது நாட்டிற்கு ஒத்துழைப்பையும், கௌரவத்தையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. மனிதனது எண்ணமாக அரச மொழியும் சிந்தனையாக இணைமொழியும் காணப்படுகிறது. எனவே எண்ணமும் சிந்தனையும இன்றி ; மனிதன் உயிர்வாழ முடியும். ஆனால் உயிரின்றி மனிதன் வாழமுடியாது. எனவே தாய் மொழி ஒருவரது உயிருக்கு ஒப்பானது .
ஒவ்வொரு மனிதனும் தாம் சார்ந்த சமூகத்தின் பண்பாடு, கலை கலாசாரம் ,ஆற்றல் வரலாறுகளை தமது தாய் மொழியால் இனங்கண்டு அதனை வெளிக்கொண்டு வருகின்றான். எமது நாடான இலங்கையிலும் தாய்மொழியை பின்பற்றுவதில் சகல சமூகங்களும் ஆர்;வம் கொண்டுள்ளன. 1956 ம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க பிரதமர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் இந்த நாட்டை இருண்டதொரு யுகத்திற்கு கொண்டு சென்றது.
இச் சட்டம் 1978ம் ஆண்டு அரசியலமைப்பு அத்தியாயம் iஎ மூலம் வழுப்பெற்றது. இதனால் சிறுபான்மை பெரும்பான்மை சமூகங்களுக்கிடையில் இன முறுகலை தோற்றுவித்தது. சிறுபான்மை சமூகம் தங்களது மொழியான தமிழ் மொழியினை அரச கரும மொழியாக்க வேண்டும் என பல போராட்டங்களை முன்னெடுத்தன. இப்போராட்டத்தின் மூலம் பல உயிர்கள், சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இந்நிலைமை தொடராமல் இருப்பதற்கு இலங்கை அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பயனாக 1987ஆம் ஆண்டு 13வது அரசியலமைப்பு திருத்தச்சட்ட உறுப்புரை 18(1), மற்றும் 1989ம் ஆன்டு 16வது திருத்தச்சட்ட உறுப்புரை 18(2) மூலம் தமிழ் மொழி அரச கரும மொழியாகவும். மற்றும் உறுப்புரை 18(3) இன் மூலம் ஆங்கில மொழி இணைப்பு மொழியாக்கப்பட்டுள்ளன. ஆசியாவின் முத்தான இலங்கையை சர்;வதேச மட்டத்தில் கல்வி பொருளாதார ரீதியாக பின்னடயச் செய்த கோர சம்பவமாகும். இதுவே உலகில் தாய் மொழியால் இடம்பெற்ற இரண்டாவது மிகப் பெரிய கலவரமாகும்.
கற்றலின் நன்மைகளாக எழுத்து, கேட்டல், வாசிப்பு, மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றை சிரமமின்றி மிக இலகுவில் விளங்கிக் கொள்வதற்கு தாய் மொழியே துணை செய்கின்றது.
எனவேதான் அவன் வாழுகின்ற சமுதாய சூழலில் அவனது பங்களிப்பு சமுதாயப் பங்காகிறது. தாய் மொழி வாயிலாக ஒரு மனித இனக்குழுவின் பண்பாடு மத, கலைக்கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் ஊடகமாக செயற்படுகின்றது. எனவே தாய் மொழி அந்த இனத்தின் வரவாற்றை பதிவு செய்கின்றது. ஒவ்வொறு இனமும் தனது தாய்மொழி வழியாகத்தான் தனது தலைமுறையினருக்கு பரம்பரையாக இன, பண்பாடு, கலைக்கலாச்சார தொடர்பை ஏற்படுத்துகிறது. நம் ஒவ்வெருவருக்கும் தாய் மொழி உண்டு. அதற்குரிய கௌரவத்தையும் மதிப்பையும் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயற்படுவோம்
.jpg)
Post a Comment