ஒஸ்மானியா கல்லூரியில், இலவச கண் சிகிச்சை முகாம்
இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (22) நடைபெற உள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் மக்கள் பணிமனைத்தலைவருமான பி.எஸ்.சி சுபியான் தெரிவித்தார்.
காலை 8.30 மணியளவில் ஆரம்பமாக உள்ள இவ்விலவச முகாமிற்கு சத்திரசிகிச்சை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. எனவே இதில் கலந்து கொள்ள விரும்புவோர் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.
தொலைபேசி இல:0777381033

Post a Comment