மகிந்த ராஜபக்ஷ ஆட்சியினால், இதை ஏன் செய்ய முடிந்திருக்கவில்லை - பிரதமர் ரணில் கேள்வி
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் முன்னைய அரசாங்கத்தினால் 5 வருடங்களாக அரச ஊழியர்கள் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு வழங்க முடியாமல் போன பல நிவாரணங்களை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கம், ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரு வாரங்களிலேயே வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.
அத்துடன் மகிந்த ராஜபக்ஷ ஆட்சியினால் இதை ஏன் செய்ய முடிந்திருக்கவில்லை என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் 23 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே பிரதமர் விக்கிரமசிங்க மேற்படி விடயங்களைக் குறிப்பிட்டார்.
.jpg)
Post a Comment