அரசாங்கத்தின் தாமத போக்கு, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - விஜத ஹேரத்
லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் தாமத போக்கை கடைப்பிடிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி. இன் பிரசார செயலாளர் விஜத ஹேரத் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இதனை தெரிவித்தார்.
இந்த நிலையில், அரசாங்கத்திற்கு இது தொடர்பில் அழுத்தம் கொடுக்கும் வகையில், எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித்த ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ஸவின் சகோதரர் பசில் ராஜபக்ச வெளிநாடுகளில் தங்கியுள்ளமை தொடர்பிலும் விஜித ஹேரத் இதன்போது கருத்து தெரிவித்தார்.
யோசித்த ராஜபக்ஸ தொடர்பில் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டை விட்டு வெளியேற அவருக்கு அளுமதி அளித்தது யார்? இதேபோல் தேர்தல் நிறைவடைந்தவுடன், பெசில் ராஜபக்ஸ அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலுக்கு சென்றுள்ளார். கடற்படையினால் மூன்று மாத விடுமுறையிலும், நாடாளுமன்றத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டும் இவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், விசாரணைகளை முன்னெடுப்பது தவறு. அரசாங்கம் உடனடியாக இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
.jpg)
Post a Comment