இயேசுநாதர் ஒரு சீன பெண்ணாக உயிர்தெழுந்துள்ளார் என நம்பிய தந்தைக்கும், மகளுக்கும் மரண தண்டனை
சீனாவில் மக்டோனால்ட் உணவகம் ஒன்றில் பெண் ஒருவரை கொலைசெய்த இரு வழிபாட்டாளர்களுக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டுள்ளது.
சீனாவில் தடைசெய் யப்பட்ட தேவாலயம் ஒன் றின் உறுப்பினர்களான சங் லிடொங் மற்றும் அவரது மகள் சங் பன் ஆகியோரே மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர்.
கொல்லப்பட்டிருக்கும் 35 வயது வு சுயாங் என்ற பெண்ணை தமது மத வழிபாட்டில் இணைப்பதற்கு முயற்சித்திருக்கும் அவர்கள் குறித்த பெண் அதனை நிராகரித்து தனது தொலை பேசி இலக்கத்தை வழங்க மறுத்ததை அடுத்தே உணவகத்தில் வைத்து பட்டப் பகலில் அடித்துக் கொல்லப் பட்டிருக்கிறார்.
கொலை செய்தது மற்றும் சட்டத்தை மீறி வழிபாடொன்றை பின்பற்றிய தந்தை, மகள் இருவரும் திங்கட்கிழமை காலை (நேற்று) மரண தண்டனைக்கு உள்ளானார்கள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதில் தனது வழிபாட்டு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குழுவுக்கு கொல்லப்பட்ட பெண் தனது தொலைபேசி இலக்கத்தை வழங்க இரு முறை மறுத்துள்ளார். அந்த பெண் ஒரு தீய ஆவியிடம் ஆட்பட்டிருப்பதாக கூறி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்த குறித்த வழிபாட்டை பின்பற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இயேசுநாதர் ஒரு சீன பெண்ணாக உயிர்தெழுந்துள்ளார் என்று அந்த குழு நம்புகிறது.

Post a Comment