தென்னைமரங்களை விட, அதிக உயரத்தில் கட்டிடங்களை அமைக்க தடைவிதிக்கப்படும் - பிரதமர் ரணில்
எதிர்வரும் காலத்தில் கடலோர பகுதிகளில் அதிக உயரமான விருந்தகங்களை நிர்மாணிக்க இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இவ்வாறான அதி உயர் கட்டிடங்களால் கடலோர பகுதிகளில் சூழல் பாதிப்பு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் தென்னைமரங்களை விட அதிக உயரத்தில் கட்டிடங்களை அமைக்க தடைவிதிக்கப்படும்.
அதேநேரம் நாட்டின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதகாவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment