Header Ads



தகுதியான முஸ்லிம், முதலமைச்சரை எற்றுக்கொள்ள தயார் - சம்பந்தன்

-ஏ.எல்.றபாய்தீன்பாபு-

இலங்கை தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட கூட்டம் கிழக்கு மாகாண எதிர்கட்சித்தலைவர் சி;தண்டாயுதபாணி தலைமையில் திருமலை நகர் சிலவர் ஸ்ட்டார்; ஹேட்டலில் 14ஆம் திகதி சனிக்கிழமை காலையில் நடை பெற்றது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தர் கட்சிக் கொள்கை விளக்கப் பேருரையை நிகழ்த்தினார்.

விரைவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில்த.தே.கூ.எவ்வாறு நடந்து கொள்வது வடமாகாண சபை கிழக்கு மாகாண சபையின் சமகால அரசியல் நிலவரம்,சர்வதேச விசாரணையின் நிலவரம்,புதிய அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு 100 நாள் வேளைத்திட்டம்,கிழக்கு மாகாண சபையில் மு.கா.நடவடிக்கை பற்றியும் தனது கொள்கை விளக்கப் பேருரையில் உரையாற்றினார். நாம் ஒரு ஜனநாயகக் கட்சி மக்களுடைய ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பவரகள் என்ற அடிப்படையில்தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வு உட்பட முழுமையாக தீர்க்கப்பட வேண்டுமென தொடர்ந்து நாம் வழியுறுத்தி வருகின்றோம்.ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவைப்பற்றி பகிரங்கமாக நான் கூற விரும்புவது அவர் தன்னுடைய மனச்சாட்சிக்கு விரோதமாக ஒரு காரியத்தைச் செய்ய விரும்புபவரல்ல.சரியானதைச் செய்ய வேண்டுமென்ற கொள்கை அடிப்படையில் நம்பிக்கையுள்ளவர்.இன்றைய அரசியல் சூழ்நிலையில் மிகப் பக்குவமாக சில விடயஙகளைக் கையாள வேண்டியுள்ளது.வடக்கிளுள்ளவர்களினதும்,தெற்கலுள்ளவர்களினதும் உள்ளங்கள் ஒன்று படவேண்டுமென ஜனாதபதி விரும்புகின்றார். சரவதேச சமூகம் த.தே.கூ. மீது விசுவாசமான நம்பிக்கையை வைத்துள்ளது.அதன் அடிப்படையில் எம்மோடு பேசுகின்றார்கள்.இந்த இடத்தை எமக்குத் தந்தவர்கள் தமிழ் மக்களாவர்.அடுத்து வரும் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் நாங்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்தால் எமக்கு இரண்டு ஆசணங்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். இதனை தமிழ் மக்கள் ஒரு புனிதமான கடமையாகக் கருத வேண்டும்.எனக்கும் வயது போய்விட்டது.இளம் துடிப்புள்ள அரசியல் தலைவர் யார் என்பதை இனங்காண வேண்டும்.எனத் தனதுரையில் குறிப்பிட்டார்.கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் 2012ஆம் ஆண்டு நடை பெற்றது.தேர்தல் முடிந்த கையோடு மு.கா.கட்சியை பகிரங்கமாக அழைப்பு விடுத்தோம். தனிப்பட்ட முறையில் எம்மால் ஆட்சி அமைக்க முடியாது.மகிந்த ராஜபக்சவை  கிழக்கில் ஆட்சி அமைக்க விடக் கூடாது என்ற அடிப்படையில் த.தே.கூ 11 ஆசனங்களும்,மு.கா. 07 ஆசனங்களும்,ஐ.தே.க.04 ஆசனங்கள் மொத்தம்  22 ஆசணங்களுடன் இணைந்து கூட்டாட்;சியை நடாத்துவோம் என் அழைத்திருந்தோம். மு.கா.க்கு முதலமைச்சரையும் வழங்க முன் வந்தோம்.ஆனால் அவர்கள் ஏற்கவில்லை.யூ.எப்.பி யுடன் சென்று ஆட்சியமைத்தார்கள்.

அன்று மு.கா.அரசாங்கத்திலிருந்து வெளியேறி அரசாங்கத்தை விமர்சித்து தேர்தலில் போட்டியிட்டார்கள்.அவ்விதமாக செயற்பட்டிருக்கா விட்டால் முஸ்லிம் மக்கள் வாக்களித்திருக்கமாட்டார்கள். 193000 வாக்குகள் நாம் பெற்றோம்.பொ.ஐ.மு.விட 6150 வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தோம்.திருகோணமலை,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் முதன்மை நிலையில் வெற்றி பெற்றோம்.61ஆயிரம் வாக்குகளைப் பெற்ற மு.கா கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டத்திலும் தோல்வியடைந்தது. இன்று நாங்கள் முஸ்லிம்களை வெறுக்கவில்லை முஸ்லிம்கள் சரித்திர ரீதியாக எம்மிலும் பார்க்க குறைந்தளவில்.1827ல் அவர்களுடைய விகிதாசாரம் 3ல் 1 மடங்காக இருந்தது.ஏறத்தாள 1889 ஆம் அண்டு  60 வருடங்களின் பின்னர் அவர்களையும் பார்க்க நாங்கள் ஒரு மடங்காக கூடுதலாக இருந்தோம். 1947ம ஆண்டு நாடு சுதந்திரமடைந்த பொழுது அவர்களை விட 10 வீதமாக கூடுதலாக இருந்தவர்கள். கிழக்கு மாகாணத்தில் பெரும்பாண்மையாக தமிழ் மக்கள்தான் வாழ்ந்து வந்தள்ளார்கள்.

இன்றைக்கும் நாங்கள்தான் பெரும்பாண்ழமயினர் அப்படியிருந்தும் கூட முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்குக் கொடுக்கத் தயாராயிருந்தோம். நான் ரவுப் ஹக்கீமுடன் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்,முஸ்லிம் மக்கள் இணைந்து மைத்திரிபால சிரிசேனவை ஆதரிக்க வேண்டுமென்ற பொழுது அவர்கள் பதில் தரவில்லை.தபால் மூல வாக்களிப்பின் பின்னர்தான் அவர்கள் கடைசி தருவாயில் மாறுகிறேன் என்று அறிவித்தார்கள். முதலமைச்சர் பதவியென்பது முக்கியமல்ல.எமது பாதை பயணத்தில் இது ஒரு சம்பவம்..இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 18 வருடமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. வடகிழக்கு இணைப்பு பற்றி முஸ்லிம் மக்களுடன் முஸ்லிம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களுடன் பேசி தீர்த்து வைக்கத் தயார்.நீதி,நியாயம் தெரியாத  மு.காங்கிரசுடன் பேசவேண்டிய அவசியமில்லை.நாங்கள் பலயீனமான நிலையில் இல்லை.நியாயம் எங்கள் பக்கத்தில் உள்ளது.ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை தன்னிச்சையாக மீறமுடியாது. நாங்கள் முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் வழங்கக் கூடாது என்று சொல்லவில்லை.வடகிழக்குக்கு ஒரு தகுதியான முஸ்லிம் முதலமைச்சர் வருவாராக இருந்தால் அதனை எற்றுக் கொள்ளத்தயார்.ஏன் அவ்வாறு வரக் கூடாது அதனை ஏற்றுக் கொள்ளத் தயார்.நாங்கள் மறுக்க மாட்டோம்.ஆனால் அதற்கும் நீதி நியாயம் இருக்க
வேண்டும். முதலமைச்சர் பதவியில் அவர்கள் தலைமையில் பெறுவதற்கு நாங்கள் விரும்பவில்லை.

றிசாத் பதியுத்தீனும் என்னை வந்து சந்தித்தார். ஆனால் எமது மாகாண சபை உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக செயல்பட விரும்பவில்லை.அவர்களுடன் பேசி ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்துள்ளார்கள். என அறிகின்றேன்.கிழக்கு மாகாண சபை முறையாக இயங்க வேண்டும். முதலமைச்சர் பதவி முடிவாக இருக்க முடியாது. இந்த நேரத்தில் இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு அநீதி இழைக்கப்டுமாக இருந்தால் தமிழ் பேசும் மக்கள் பெரும்பாண்மையாக வாழும் பிரதேசத்தில் ஒரே ஆட்சி ஒழுற்கின் கீழ் அந்தப் பிரதேச மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டியஅ த்தியாவசிய தேவையாகும்.அது தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் சொல்லுகின்றது.எமக்கு அநீத் செய்கின்றவர்கள் அதன் மூலம் இலாபத்தை அடைய நினைத்தால் அது நிலைத்து நிற்காது. அது மாத்திரமல்ல இதற்காகத்தான் வியர்வை சிந்தியது,இதற்காகத்தான் இரத்தம் சிந்தியது. ஜனநாயக ரீதியிலான அதிகாரத்தை கபடமாக அபகரிக்க யாராவது நினைத்தால் அவர்கள் இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.ஓரு காலத்தில் இந்த நாட்டில் மாவட்ட சபையைக் கூட உருவாக்க முடியாதிருந்தது.இன்றைக்கு மாகாண சபை வந்திருக்கின்றது. யாருடைய போராட்டத்தினால்,அர்ப்பணிப்பினால் இது வந்தது.

ஏந்த முஸ்லிம் தலைவர்கள் இதர்க்காக அர்ப்பணிப்புச் செய்திருக்கின்றார்கள்.மொழி சம்மந்தமான போராட்டத்தில் நீங்கள் பங்கு பற்றினீர்களா?காணி பறிபோனபோது குடியேற்றம் சம்மந்தமாக நாங்கள் போராடிய போது நீங்கள் பங்கு பற்றிநீரகளா?அதிகாரப் பகிர்வு கேட்டபோது நீங்கள் பங்கு பற்றினீர்களா?இப்பொழுது அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருந்த நீங்கள் உங்கள் தேவைககைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தீர்கள். மக்களுடைய போராட்டத்தில் நீங்கள் ஈடுபடவில்லை இன்றைக்கு தமிழ் மக்களுடையதை எப்படி நீங்கள் பறிக்கின்றீர்கள்.கிழக்கு மாகாண சபை முறையாக இயங்கு  வதற்கு எமது மாகாண சபை உறுப்பினர்களின் வேண்டுகொளை செவிசாய்த்து ஒத்துழைப்பு வழங்குவோம்.

2 comments:

  1. திரு.சம்பந்தன் அவர்களே, முதலில் நீர் முஸ்லிம் தலைமைத்துவத்தைதையும் முஸ்லிம்களையும் எடுப்பார் கைபிள்ளையாக பேசுவதை நிறுத்திக் கொள்ளும். நீர் கூறும் தகுதி எது என்பதை விபரித்துக் கூறுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம். வன்முறை போராட்டத்தினால் அள்ளுண்டுபோன நீர் எல்லாம் ( ஆனந்த சங்கரியை முதுகில் குத்துவிட்டு தலைமை பதவியையும் எம்பி பதவியையும் தக்க வைத்துக் கொண்ட நீர்) நீதி நியாயம் பற்றி கதைக்க உமக்கு என்ன அருகதை உள்ளது. நீர் எந்தகணக்கு போட்டு காட்டினாலும் கடைசியில் கூட்டு சேர்ந்துதான் கிழக்கு மாகான சபையில் ஆட்சி அமைக்க வேண்டும். அதை முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்கள் சார்பில் செய்து கொண்டிருக்கிறது. வியர்வை இரத்தம் சிந்தியதை கதைக்கிறீர் ( இதை கூரி முஸ்லிம்களை மிரட்டுவது போல் தெரிகிறது ) ஆம் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களிலும், தூகத்திலும், சிறியோர், பெரியோர், என்று இரத்தம் சிந்தியதை மறக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் கூனிக் குறுகிப் போய் இருந்த நீர் இப்போது நீதி நியாயம் கதைகிரீர். இருந்தாலும் இப்போதும் நாம் நீதி நியாயமாகத்தான் ஜனநாயக வழியில் ( முஸ்லிம் காங்கிரஸ்) நடக்கின்றோம். இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி கதைகிரீர், அதில் சர்வசன வாக்கெடுப்பு என்று ஓன்று உள்ளது அது பற்றி நன்றாக வாசியும் அப்போது தெரியும் யார் ஏமாற்ற பட்டார்கள் என்று. கடைசியாக கூறுகிறொம் பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவை பெற்ற ( ஜனநாயகத்தின் படி ) முஸ்லிம் காங்கிரசே முஸ்லிம்களின் தலைமை அதை மதித்து அதனுடன் பேசும். அப்படி இல்லாவிட்டால் அடிக்கி வாசியும்.

    ReplyDelete
  2. When you have three sons and one son cries for bun, the parents never buy only one bun, they need to treat all three sons equally and feed all three. If the parents feed only one son with a bun they are not deserved to be parents and the other sons would ask for pizza in a few hours, not the bun.

    ReplyDelete

Powered by Blogger.