Header Ads



மரண அனுபவமா..?

அமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் தனது மரண அனுபவத்தில், சொர்க்கத்திற்கு சென்று வந்த அனுபவத்துடன், வருங்காலத்தில் தனது மகன் மரணமடைவது குறித்தும் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

படகு சவாரி

அமெரிக்காவின் வியாமிங் மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் மேரி நீல்.  இவர் கடந்த 1999-ம் ஆண்டு தனது கணவர் பில் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தெற்கு சிலி பகுதிக்கு சென்று படகு சவாரி செய்தார்.  நீல் சவாரி செய்தபோத நீர்வீழ்ச்சி ஒன்றின் கீழ் சிக்கி கொண்டார்.  நீல் நீருக்குள் மூழ்கியபோது அவருடன் டாம் லாங் என்ற நண்பர் உடனிருந்துள்ளார்.

அவர் கூறும்போது, என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது.  நாங்கள் 24 நிமிடங்கள் அதனுள் இருந்தோம்.  நீல் இறந்து விட்டார்.  அவரது உடல் நீலமானது.  மெழுகு போன்று மாறி விட்டது.  அவருக்கு இருதய துடிப்பு இல்லை.  சுவாசம் இல்லை.  உடல் குளிர்ச்சி அடைந்து விட்டது.  அதிர்ஷ்டவசமாக, 3 குழந்தைகளின் தாயான நீலுக்கு மீண்டும் நினைவு திரும்பியது.  அவருக்கு மூளையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என ஹப்பிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி கூறுகிறது.

சொர்க்கத்தில் நீல்

சுமார் அரை மணி நேரம் பிராண வாயு இல்லாத நிலையில் இருந்துள்ள நீலுக்கு நினைவு திரும்பியபோது அவர் சொல்வதற்கு ஒரு கதையை தன்னிடம் வைத்திருந்தார்.  அவர் சொர்க்கத்திற்கு சென்றுள்ளார்.  எனது உடலில் இருந்து ஆன்மா வெளியேறி செல்வதை என்னால் உணர முடிந்தது என உணர்ச்சிகரமுடன் நீல் கூறியுள்ளார்.

அவர் நீருக்கு அடியில் இருந்த அந்த பொழுதை விவரிக்கிறார்.  நான் எழுகிறேன்.  நீரை விட்டு வெளியே வருகிறேன்.  உடனடியாக திரளான மக்கள் என்னை வரவேற்கின்றனர்.  நிறைய பேர், நிறைய ஆன்மாக்கள் என்னை சூழ்ந்த நிலையில் எனக்கு வரவேற்பு அளித்தனர் என கூறுகிறார்.  நீலை வரவேற்ற ஆன்மாக்கள் அதற்காக அதிகமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உடலுடன் சேர்ந்த நீல்

ஒரு நீண்ட பயணத்திற்கு பின்னர் வீடு திரும்பியபோது ஏற்படும் உணர்ச்சிக்கு இணையாக அது இருந்தது என நீல் கூறியுள்ளார்.  பூமிக்கு இணையான எதுவும் அந்த சொர்க்கத்தில் இல்லை என கூறும் நீல், அந்த உணர்ச்சிகள் வேறுபட்டவை.  என்னவென்றால், அந்த அழகு உண்மையில் அதிகமானது என கூறுகிறார்.  அதனை விட்டு வர நீலுக்கு விருப்பமில்லை.  அந்த ஆன்மாக்கள் தலைகள், கரங்கள், கால்கள் மற்றும் ஆடைகளை அணிந்திருந்தனர்.

அவர்கள் நீலிடம், இங்கு வருவதற்கான உனது நேரம் இது அல்ல.  நீ திரும்ப செல்ல வேண்டும்.  ஏனெனில் செய்வதற்கு உனக்கு பணிகள் உள்ளன என கூறியுள்ளனர்.  உனது அனுபவத்தை மக்களிடம் பகிர வேண்டும் என்றும் அவர்கள் நீலிடம் கூறியுள்ளனர்.  அந்த ஆன்மாக்கள் நீலை அவரது உடலுடன் சேர்த்து விட்டது.

மரண எச்சரிக்கை

இது குறித்து நீல், டு ஹெவன் அண்ட் பேக் என்ற தலைப்பில் எழுதியுள்ளவற்றில், வருங்காலத்தில் நடக்க உள்ள ஒரு சோகமான சம்பவம் குறித்து தனக்கு எச்சரிக்கை ஒன்றை அந்த ஆன்மாக்கள் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.  அவர்கள், எனது மூத்த மகன் வருங்காலத்தில் மரணமடைவது குறித்து கூறினர்.  அது குறித்த தேதி அல்லது நேரம் ஆகியவற்றை அவர்கள் என்னிடம் கூறவில்லை.  ஆனால் அது நடக்கும் என்பது தெளிவானது.  பத்து வருடங்கள் கழித்து அது நடந்தது.

ஒவ்வொரு நாளும் நான் எழும்போது, எனது மகனின் வாழ்வு குறித்த திட்டமானது மாறும் என நம்பிக்கை கொண்டிருந்தேன் என கூறும் நீல், அதனை ஒரு சுமையென கருதி தனது கணவரிடம் கூறவில்லை.  நீலின் மகனான வில்லீ மறைந்த தினத்தில் தனது மகன் குறித்து நீல் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

அதிசய நிகழ்வு

வில்லீயுடன் செலவிட்ட எனது நேரத்திற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.  உனது புன்னகை, உனது ஆன்மா மற்றும் உனது ஒளி இருளை நிரப்பும்.  எங்களுடன் இன்னும் நீ இருப்பது போன்ற மிக சிறிய விசயங்களை செய்து காட்டியதற்காக நான் நன்றி தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

அறிவியல்பூர்வ பெண்ணான நீல் இரு விசயங்களில் சிக்கி தவித்து உள்ளார்.  மேற்கூறிய சூழலை அறிவியல்பூர்வமாக விளக்கி கூறுவதா?  அல்லது அதனை ஓர் அதிசய நிகழ்வாக கூறுவதா? என அவர் மன குழப்பத்தில் சிக்கி கொண்டுள்ளார்.  கனவுகள், மூளை மரணம் அடைந்தால் நடப்பது என்ன மற்றும் ஆழ்ந்த மனநிலைக்கு செல்லும்போது ஏற்படும் அனுபவம் ஆகியவை குறித்து படித்துள்ளதாக கூறும் நீல், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரமாக சொல்ல வேண்டிய தேவை தனக்கு இருந்ததாக கூறுகிறார்.

அறிவியலை கடந்தது

நாம் புரிந்து கொள்ள கூடிய ஒரு விசயம் குறித்து ஒரு விளக்கத்தை கண்டுபிடிக்க நாம் விரும்புகிறோம்.  நான் திடமான நம்பிக்கை உடையவள்.  நான் எதனையும் மிகைப்படுத்தி கூறவில்லை.  இறுதியில் எனது முடிவு, அது உண்மையில் அறிவியலை கடந்தது.  எனக்கு என்ன தெரியும் என்பது குறித்து முழுவதுமாக எனக்கு தெரியும் என கூறி அவர் முடிக்கிறார்.

No comments

Powered by Blogger.