Header Ads



கட்டாரில் தலிபான்களுடன், அமெரிக்கா நேரடியாக பேசுகிறது


ஆப்கான் அமைதி முயற்சி குறித்து தலிபான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கட்டாரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தலிபான் வட்டாரம் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.

ஆப்கானில் கடந்த 13 ஆண்டுகள் மோதலை முடிவுக்கு கொண்டுவர தலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பேச்சுவார்த் தைகளுக்கு அண்மைய ஆண்டுகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறான ஒரு அமைதி முயற்சிக்கு வாய்ப்பை ஏற்படுத்த 2013 ஆம் ஆண்டில் தலிபான் அமைப்பு கட்டாரில் அலுவலகம் ஒன்றை திறந்தபோதும் ஆப்கான் அரசின் எதிர்ப்பால் ஒரு மாதத்திற்குள் அந்த அலுவலகம் மூடப்பட்டது. "தய்யிப் அகா தலைமையில் ஆப்கான் தலிபான் அமைப்பின் உச்ச கவுன்ஸிலின் முன்னாள் உறுப்பினர்கள் ஐவர் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள்" என்று பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் தலிபான் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கான கால அட்டவணை குறித்த விபரம் வெளியிடப்படவில்லை. தலிபான் அமைப்பின் நிர்வாகக் குழுவான குவெட்டா '_ராவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்சாயியின் வெளியேற்றம் இந்த பேச்சுவார்த்தைக்கான வாயிலை திறந்திருப்பதாக தலிபான் தளபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

"கட்டாரில் இம்முறை தலிபான்கள் அமெ ரக்கர்களுடன் நேருக்கு நேர் சந்தித்து பேசுவார்கள். இதற்கே கர்சாய் பயந்தார். ஆப்கான் அரசை அமெரிக்கர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதை அவர் விரும்பவில்லை" என்று அந்த தளபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.