Header Ads



முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து, அமைச்சரவையில் பங்கேற்க தமிழ்த் கூட்டமைப்பு தயார் - அரியநேத்திரன்

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து அமைச்சரவையில் பங்கேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

அதன்படி, இரண்டு அமைச்சுப் பொறுப்புக்கள் மற்றும் ஒரு பிரதி தவிசாளர் பதவியை ஏற்றுக் கொள்ள முஸ்லிம் காங்கிரஸுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் Ad டம் தெரிவித்தார். 

எனினும் யார் யாருக்கு எந்தெந்த பதவிகளை வழங்குவது என்பது தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் உள்ள 11 உறுப்பினர்களும் கட்சித் தலைமையும் கூடி முடிவெடுக்கும் என அவர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.