ஹரீஸின் கவனத்திற்கு..!
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் (எம்.பி) அவர்களுக்கு மாவடிப்பள்ளிப் பிரதேசத்தில் இருந்து ஒரு திறந்த மடல்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாவடிப்பள்ளிக் கிராம மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே!
அபிவிருத்தி என்பது வரலாறுகளைப் பேசவேன்டும். இக்கிராம வரலாற்றில் எம் எஸ் காரியப்பர், ஜலால்டீன் எம் பி, நமது பெரும் தலைவர் மர்ஹூம் எம் எச் எம் அஸ்ரப் ஆகியோரது பெயர்கள் இருக்கின்றபோது இக்கிராமத்துக்குச் சொந்தக்காரனாகிய உங்களையும் நாளை இக்கிராம வரலாறு பேசவேண்டும் என்பதனை ஞாபகமூட்டுகின்றேன்.
மாவடிப்பள்ளிப் பிரதேசத்திலே மைதானக் குறையைத் தீர்க்கவேண்டும் என்பதற்காக நீங்கள் வீதிவழியே சுற்றிச் சுற்றி மைதானத்துக்கான நிலத்தைத் தேடியது எங்களுக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. மைதானம் பெற்றுத்தரா விட்டாலும் நீங்கள் எங்கள் கிராமத்தில் மைதானத்துக்கான நிலத்தை தேடி அலைந்ததை இட்டு நன்றி கூறுகின்றோம். இன்ஸா அல்லாஹ் அக்குைறயை உங்களினால் மாத்திரமே நிவர்த்திக்க முடியும் என்ற எதிர்பார்ப்புடன் இன்னும் இருக்கின்றோம்.
அதற்கு அடுத்ததாக இன்னும் ஒன்றை ஞாபக மூட்டலாம் என நினைக்கின்றேன்.
தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலம் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற "தயட்ட கிருள" தேசத்துக்கு மகுடம் கண்காட்சியினுடைய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இக்கிராமத்தின் பொது நூலகத்துக்கான கட்டிடம் கட்டப்பட்டு கட்டிடத்துக்கான அனைத்து வேலைகளும் நிறைவுற்றிருந்தும் இன்னும் தளபாட வசதிகள் இன்மையினால் இக்கட்டிடம் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கின்றது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
நீங்கள் உடனடியாக இக்கிராம நூலகத்துக்குச் சென்று அங்குள்ள நிைலமைகளை நேரில் அவதானித்து உங்களது சொந்தக் கிராமமாகிய இக்கிராமத்தில் உங்களது வரலாற்றை பேசக் கூடிய இந்நிலையான அபிவிருத்தியைச் செய்து கட்டப்பட்டுக்கிடக்கின்ற உங்களது கிராம நூலகத்தை உங்களது மக்கள் பாவனைக்கு வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.
நன்றி
இப்படிக்கு
எஸ்.எம்.இஹ்ஸான்(மாவடி)
.jpg)
Post a Comment