Header Ads



பிரித்தானிய முஸ்லிம்களின் 'ஹலால்' முறைமைக்கு ஆபத்து..! அவசரமாக செயல்படவும்..!!

அமானுல்லா கமால்தீன் (அமானத்ஸ்)

ஐக்கிய இராச்சியத்தில் மிருகங்களை உணவுக்காக ஹலாலாக மிருகங்களின் உணர்ச்சிகளை மழுங்கச் செய்யாமல் (Non Stun Slaughter) அறுக்கும் முறையில் மிருகங்களின் உரிமைகள்  மீறப்படுவதாகவும் மதங்களின் உரிமைகள் மிருகங்களின் உரிமைகளை விட உயர்ந்துள்ளதாகவும் இந்த ஹலால் முறை தடுக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட  கைஎழுத்துக்கள் பிரித்தானிய கால் நடை சங்கத்தினால் பெறப்பட்டு விண்ணப்பம் தயாரித்து முன் வைக்கப்பட்டுள்ளதால் இவ்விடயம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் 23 – 02 - 2015ல் விவாதிக்கப்பட இருக்கின்றது. எமது கையிலிருக்கின்ற உரிமையான ஹலால் முறையை பாதுகாப்பதற்கு தனக்கு முடிந்த முயற்சியை அவசரமாக செய்வது ஒவ்வொருவரதும் கடமையாகும்.

எனவே பாராளுமன்ற விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஹலால் முறைக்கு ஆதரவாக ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட கையெழுத்துகளைப் பெற்று ஹலாலை பாதுகாக்க இணையத் தளங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.

இஸ்லாம் மிருகங்களை கருணையுடன் நடத்துகிறது. அவற்றை அறுக்கும் போது  மிகக் குறைந்த வதை கொடுக்கும் முறையையே கையாளுகின்றது. இஸ்லாமிய யூத அறுப்பு முறைகள் வதை குறைந்தது என்ற விடயத்தை   விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதை பின்வரும் இணையத் தளங்களில் பார்க்கலாம்.


சென்ற வாரம் பயங்கரவாத தடுப்பு மசோதா, இந்த வாரம் ஹலால் எதிர்ப்பு மசோதா, அடுத்த வாரம் வேறொன்றை முன் வைப்பார்கள். நமது அமலை செய்து கொண்டு சுயநலமாக கை கட்டிப் பார்ரத்துக் கொண்டிருக்கும் நேரமல்ல இது. முஸ்லிம்கள் விழித்து எழ வேண்டும.; செயல்பட வேண்டும். குரல் கொடுக்க வேண்டும்.

முதலில் அல்லாஹ்விடம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மத உரிமைகளையும் பாதுகாக்கும்படி துஆ கேற்க வேண்டும். அத்தோடு ஹலால் முறையை பாதுகாப்பதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தில் பின்வரும் இணையத்தளத்தில் உடனடியாக கையெழுத்திடுவதுடன் நமக்கு தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கை எழுத்திடச் செய்ய வேண்டும். 


ஏனெனில் நாளை கியாமத்தில்; உங்ஙகளுக்கு தரப்பட்டிருந்த உரிமைகள் பறிக்கப்படும் போது நீ என்ன செய்தாய்?  என்று அல்லாஹ் கேற்பான். கை கட்டிப் பார்ததுக்கொண்டிருந்து விட்டு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

No comments

Powered by Blogger.