''குழப்பம் ஆரம்பம்''
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கிளர்ச்சியில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் அதிகாரங்கள், துறைசார் விடயங்களை வரையறுக்க பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
பிரதமரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்படும் என சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
பைசர் முஸ்தபா, ராஜீவ விஜேசிங்க போன்றவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு இவ்வாறு அநீதி இழைக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ராஜீவ விஜேசிங்கவிற்கு எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ரணில் முன்வரவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விடயங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் உரிய கவனம் செலுத்தாமை கவலையளிப்பதாக சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் குழுவில் யார் அங்கம் வகிக்கின்றார்கள் யார் இதனை வழிநடத்துகின்றார்கள் என்பது பற்றிய விபரங்களை பத்திரிகை வெளியிடவில்லை.

Post a Comment