சாஸ்திரக்காரனை நம்பாதீர்கள் - மஹிந்தவிடம் கூறிய பேராசிரியர்
சாஸ்திரக்காரர் சுமணதாஸ அபேகுணவர்த்தனவின் ஆருடத்தை நம்பி ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தாம் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை தெரிவித்ததாக இலங்கையின் முன்னணி பேராசிரியர் கார்லோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தாம் மஹிந்தவை சந்திக்க முடியவில்லை என்றபோதிலும், முன்னாள் அமைச்சர் டியு குணசேகரவின் மூலம் அவரிடம் இந்த விடயத்தை வலியுறுத்தியுதாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
சாஸ்திரத்தை வைத்துக்கொண்டு அல்ல, விஞ்ஞானத்தின் அடிப்படையில் ஏனைய விடயங்களை கருத்திற்கொண்டே இந்த ஆலோசனையை மஹிந்தவிடம் தாம் தெரிவித்தாக அவர் தெரிவித்துள்ளார்.
வளர்ந்துவரும் மனித இனத்துக்கு இன்றும் மூடநம்பிக்கை பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஏற்கனவே மாலித் ஜெயதிலக்க என்ற ஆய்வாளர், சிங்கள பௌத்தர்களின் 47.5வீத வாக்குகளை வைத்துக்கொண்டு மஹிந்தவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறமுடியாது என்று தெரிவித்திருந்தார்.
குறித்த மாலித் என்பவர் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் நெருங்கிய நண்பராவார் என்றும் கார்லோ பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment