கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெறவேண்டும்
-இக்பால் அலி-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் எமது நாட்டினுடைய நல்லாட்சி ஒன்றுக்காக ஒன்றுபட்டு செயற்பட்டதைப் போன்று இம்மாவட்டத்தில் ஒன்றுபட்டு பொதுத் தேர்தலின் போது ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள முனைய வேண்டும் என்று மஹர அல் ஹிக்மா அமைப்பின் இஸ்தாபகத் தலைவர் முஹமட் அலி டூல் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறசேனவை வெற்றிபெறச் செய்வதற்கு கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களும் அராஜகத்தை ஒழித்து ஜனநாயக அரசியலை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயற்பட்டனர். இதன் காரணமாக முஸ்லிம்களுக்கென நேரடியாக சேவை செய்யக் கூடிய முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சு. நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, வர்;த்தக வாணிபத்துறை அமைச்சு அத்துடன் முக்கியவத்துவம் வாய்ந்த இராஜங்க அமைச்சு, பிரதி அமைச்சு என வழங்கப்பட்டுள்ளது. இது எமது முஸ்லிம் சமூகத்தை கௌரவிப்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது என்று ஈண்டு குறிப்பிட முடியும். இத்தகைய அமைச்சுக்களையும முஸ்லிம்களுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தையும் தக்க வைத்துக் கொள்வது மக்களின் கடப்பாடாகும். அதே போன்று முஸ்லிம் அரசியல் பிரநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடும் இருந்து கொண்டிருக்கிறது.
கம்பஹா மாட்டத்தைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. சுமார் 65000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த மாகாண சபைத் தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி றஹீம் மாத்திரமே தோல்வியடையாமல் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகின்றார். இங்குள்ள வாக்கு விகிதத்தை வைத்து மதிப்பீடு செய்வோமாயின் கணிசமானளவு ஒரு பாராளுமன்ற பிரதி ஒருவரைப் பெற்றுக் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. இம்மாவட்டத்திலுள்ள அனைத்து புத்திஜீவிகளும், பள்ளிவாசல்கள் தலைவர்களும்;, அரசியல் முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துதல் அவசியமாகும்.
குறிப்பாக அரசியல் களத்தில் மக்களுடன் நேரடி தொடர்களைக் கொண்ட நீண்ட அரசியல் அனுபவங்களைக் கொண்ட ஒருவர் இந்த பொதுத் தேர்தலின் போது நிறுத்தப்படல் வேண்டும். அந்தவகையில் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி றஹீம் பொறுத்தமானவர் என்பது என்னுடைய அபிப்பிராயமாகும். எனவே இதற்காக நாம் எல்லோரும் கட்சி பேதங்களை மறந்து எமது மாவட்டத்திற்கென ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக் கொள்ள நாம் அனைவரும் ஒன்றுபட்டு முனைப்புடன் செயற்பட வேண்டும் என வேண்டுகோளை விடுத்துள்ளார்
.jpg)
Post a Comment