Header Ads



பெண்ணை காப்பாற்றச்சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி


மா ஓயவில் நீராடச் சென்ற யுவதியொருவர் நீரில் மூழ்கிய போது அவரைக் காப்பாற்றச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியானகினர்.

மீறிகம லோலுவாகொட பிரதேசத்தில் குறித்த யுவதில் நீராடச் சென்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

யுவதியை மீட்பதற்கு அவரின் உறவினர்கள் இருவர் முயற்சித்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இருந்த போதும், குறித்த பெண்ணை பிரதேச வாசிகள் காப்பாற்றியுள்ளனர்.

ஓரு இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றையவரின் சடலத்தை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.