காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி -படங்கள்-
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் 2015 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 19-02-2015 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகபாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
நான்கு இல்லங்கலாக பிரிக்கப்பட்டு இடம்பெற்ற இவ் இல்ல விளையாட்டு போட்டியில் பச்சை நிறத்தில் போட்டியிட்ட ஜெஸ்மின் இல்லம் 326 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தையும், சிவப்பு நிறத்தில் போட்டியிட்ட றோஸ் இல்லம் 238 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும் மஞ்சள் நிறத்தில் போட்டியிட்ட ஓகிட் இல்லம் 231 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தையும் நீல நிறத்தில் போட்டியிட்ட லோட்டஸ் இல்லம் நான்காவது இடத்தையும் பெற்றிருந்தன.




Post a Comment