பாராளுமன்ற தேர்தலில் UNP யின் பலமும், முதுகிலேறி பயணிக்கவிருக்கும் முஸ்லிம் கட்சிகளும் (ஆய்வு ரிப்போர்ட்)
-நஜீப் பின் கபூர்-
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இன்று 45 நாட்கள் கடந்து போய் இருக்கின்றது. எனவே மைத்திரி-ரணில் 100 நாள் வேலைத் திட்டத்தில் இன்னும் எஞ்சி இருப்பது 55 நாட்கள் மட்டுமே. மழை பொழிவதற்கு முன் ஆகாயத்தில் மேக மூட்டங்கள் ஒன்று திறள்வது போல் மைத்திரி - ரணில் நல்லாட்சிக் காலநிலையிலும் மக்கள் எதிர்பார்த்த வசந்தத்துக்குப் பதிலாக அங்கும் மப்பும் மந்தரமும் என்ற நிலை தோன்றி வருவதை அவதானிக்க முடிகின்றது.
ஜனாதிபதி மைத்திரி தலைமைத்துவம் கொடுக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அரசின் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பாராளுமன்றத்திலும் ஊடகங்கள் முன்னே வந்து வக்குறுதிகள் கொடுத்தாலும், சுதந்திரக் கட்சியில் உண்மையில் ஆதரவு கொடுப்போரும் கழுத்தறுப்பு என்றும் பல குழுக்கள் சுதந்திரக் கட்சியில் இருப்பது தற்போது பகிரங்கமாக அம்பலத்திற்கு வந்திருக்கின்றது. மைத்திரியின் தலைமைத்துவத்திற்கு அவர்கள் எவ்வளவு தூரம் மத்திப்பளிக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நுகேகொடையில் நடந்த மஹிந்த விசுவாசிகள் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் தடையையும் மீறி அதில் பலர் கலந்து கொண்டிருப்பதிலிருந்து இது பகிரங்கமாகி இருக்கின்றது. மேலும் தொடர்ந்து சுதந்திரக் கட்சி வழங்குகின்ற 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமானால் ஆளும் தரப்பு அப்படி நடந்து கொள்ள வேண்டும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் அடிக்கடி அவர்கள் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகின்றது. எனவே சுதந்திரக் கட்சியினர் இந்த 100 நாள் வேலைத் திட்டத்திற்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற சந்தேகம் தற்போது வலுத்து வருகின்றது.
தற்போது நுகேகொடையில் நடந்த கூட்டம் நாட்டில் ஒரு பேசு பொருளாகவும் மஹிந்த விசுவாசிகளுக்கு நம்பிக்கை தரும் செய்தியாகவும் அமைந்திருக்கின்றது. இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் மஹிந்த ராஜபக்ஷ பின்னணியில் இருந்து செயலாற்றி இருக்கின்றார் என்று தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 212 வசு வண்டிகளில் தேர்தல் காலங்களைப் போன்றே ஏற்பாட்டாளர்கள் கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வந்திருக்கின்றார்கள் என்று கணக்குப் போட்டுக் காட்டுகின்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
ஜனாதிபதித் தேர்தல் காலங்களிலும் இதற்கும் மேல் ஆட்களை ராஜபக்ஷக்கள் அழைத்து வந்து கூட்டம் போட்டார்கள். ஆனால் நடந்தது என்ன என்ற கேள்வியையும் ராஜித அங்கு ஊடகங்கள் முன் எழுப்பினார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் ஒரு இலட்சம் 50000 ஆயிரம் என்று ஏற்பாட்டாளர்கள் சொன்னாலும் 30000 முதல் 35000 பேரளவிலேயே அங்கு ஆட்கள் கூடி இருந்தார்கள் என்பது எமது கணக்கு.
கடந்த தேர்தலில் ராஜபக்ஷவுக்கு மக்கள் ஐக்கிய முன்னணி ஆதரவு கொடுத்தாலும் அதில் சுதந்திரக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் ஒரு 10000 ம் வாக்குகளை ராஜபக்ஷவுக்கு சேர்த்துக் கொடுக்க வக்கில்லாத கட்சிகள்தான் பெரும்பாலும் அந்தக் கூட்டில் இருந்தது. எனவே அந்த வகையில் ராஜபக்ஷ கடந்த தேர்தலில் 57 இலட்சம் வாக்குகளைத் தனித்துப் பெற்றதும் பெரிய விடயம்தான். எனவே இந்தளவு வாக்குகளைப் பெற்ற ஒரு தலைவருக்கு விசுவாசம் தெரிவித்து நடாத்தப்படுகின்ற கூட்டத்தில் 35ஆயிரம் பேர் வந்து கலந்து கொண்டர்கள் என்றால் அதனை ஒரு பெரிய இசுவாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை .
ஜனாதிபதித் தேர்தல் சிங்கள சமூகம் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தனது பெரும்பான்மை வாக்குகளை ராஜபக்ஷவுக்குக் கொடுத்தது. சிங்கள மக்களின் 55 முதல் 58 சதவீதத்திற்கும் இடைப்பட்ட வாக்குகளை ராஜபக்ஷ பெறுகின்ற போது மைத்திரி 45 முதல் 42 சதவீத சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றிருக்கின்றார் என்பதனை புள்ளி விபரங்களில் பார்க்க முடிகின்றது
இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து சிறுபான்மை சமூகங்களும் குறிப்பாக சிங்களம் பேசுகின்ற கிருஸ்வதர்கள் கூட ராஜபக்ஷவை நிராகரிததே கடந்த தேர்தலில் வாக்களித்தார்கள் என்பதற்கு கம்பஹ மாவட்ட தேர்தல் முடிவுகள் நல்ல உதாரணம். வடக்கு கிழக்க தமிழர்கள் முஸ்லிம்கள் மலையக தமிழர்கள் தமது வாக்கில் 77 முதல் 80 வரையிலான சதவீத வாக்குகளை மைத்திரிக்கு வழங்கி இருக்கின்றார்கள். எனவே ராஜபக்ஷவுக்கு 20 முதல் 23 சதவீத வாக்குகளே சிறுபான்மை சமூகங்கள் வழங்கி இருக்கின்றது. இதற்கு ஆதரமாக சில புள்ளி விபரங்களை வழங்க முடியும் யாழ் மாவட்டத்தில் மைத்தரி 74 சதவீவாக்குகள் ராஜபக்ஷ 21 சதவீதம். மட்டக்களப்பு மைத்தரி 82 சதவீவாக்குகள் ராஜபக்ஷ 16 சதவீத வாக்குகள்.
சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாத்தறையில் ராஜக்ஷ 57 சதவீத வாக்குகளையும் மைத்தரி 43 சதவீத வாக்குகளையும் பெற்றிக்கின்றார். அதேபோன்று அனுராதபுரத்தில்;; மஹிந்த ராஜபக்ஷ 53 சதவீத வாக்குகளையும் மைத்தரி 45 சதவீத வாக்குகளையும் பெற்றிக்கின்றார். எனவே தர்க்கரீதியில் பார்க்கின்றபோது ராஜபக்ஷவுக்கு கடந்த தேர்ததலில் பெரியளவில் சிங்கள மக்கள் கூட ஆதரவு கொடுக்கவில்லை என்று தெரிகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் டலஸ் அலகப்பெரும நாங்கள் சிங்கள மக்கள் ராஜபக்ஷவுக்கு 75 முதல் 78 சதவீத வாக்குகளைத் தருவார்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்திருந்தோம் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்க்கது.
சிங்கள மக்களே ராஜபக்ஷவை நிரகரித்திருக்கின்றார்கள் என்பது இதிலிருந்து புரிகின்றது. என்றாலும் புள்ளி விபரங்களின்படி ராஜபக்ஷவுக்கு கிடைத்த வாக்குகளில் 48 முதல் 50 இலட்சம் வாக்குகள் சிங்கள மக்களுடையது. சிறுபான்மை சமூகத்தின் 6 முதல் 9 இலட்சத்திற்கும் இடைப்பட்ட வாக்குகள் அவருக்குக் கிடைத்திருக்கின்றது என்று தெரிகின்றது. அதே நேரம் மைத்திரிக்கு கிடைத்த வாக்குகளில் சிங்கள மக்கள் 42 முதல் 44 இலட்சம் வாக்குகளும் சிறுபான்மை சமூகத்தின 18 முதல் 20 இலட்சம் வாக்குகளும் கிடைத்திருக்கின்றது என்பது நாம் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து பார்த்தபோது கண்டுகொள்ள முடிந்தது. எனவே யதார்த்தத்தை தர்க்க ரீதியிலும் புள்ளிவிவர ரீதியிலும் ஆய்வு செய்யாது அனேகம் பேர் கண்ட படி கண்களை மூடிக் கொண்டு சொல்லியும், பேசியும் மேலும் வெற்றிக்கு உரிமை கோரியும் வருகின்றார்கள்.
நாம் மேற்சொன்ன புள்ளிவிபரங்களுடன் மைத்திரி - ராஜபக்ஷ செல்வாக்கை அல்லது இந்த நாட்டில் இருக்கின்ற பிரதான கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் காட்டிய பலத்துடன் ஒப்பு நோக்கி வருகின்ற தேர்தல் தொடர்பாக இன்றைய களநிலவரத்தை மதிப்பீடு செய்து பார்க்கலாம் என்று தோன்றுகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இனரீதியாக மக்கள் வாக்களித்த ஒழுங்கை முன்பு பார்த்தோம் இப்போது இந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி ரீதியில் எந்த அடிப்படையில் வாக்குகள் வழங்ப்படடிருக்கின்றது என்ற விடயத்தையும் ஒரு முறை மதிப்பீடு செய்து பார்க்கலாம் என்று தோன்றுகின்றது அதன் அடிப்படையில் மைத்திரியின் அன்னச் சின்னத்திற்குக் கிடைத்த வாக்குகள் பின்வரும் அடிப்படையில் அமைந்திருந்தன என்பது எமது கணிப்பு.
ஐ.தே.க. (ரணில்) 3600000, த.தே.கூ (சம்பந்தன்) 0900000, சு.க. (மைத்தரி அணி) 800000, ஜே.வி.பி. (அணுரகுமார) 0500000, ஜ.க. (பொன்சேக்க) 0300000, மலையக் கட்சிகள் 0300000, சில்லறைகள் 0300000, மொத்தம் 6700000
இதே போன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த வாக்குகளை நோக்கிகுகின்ற போது ஸ்ரீ.ல.சு. கட்சியைத் தவிர அவரது கூட்டிலிருந்து எந்தக் கட்சிக்கும் பெரிய வாக்கு வங்கி இருக்கவில்லை. ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் அமைந்திருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரசே ராஜபக்ஷவை ஆதரித்த கூட்டிலிருந்த மிகப் பெரிய கட்சியாக இருந்தது. அந்தக் கட்சியின் கேட்டையான நுவரெலியா மாவட்டத்திலேயே அந்தக் கட்சிக்கு மரண அடி விழுந்திருந்தது.
இதனைத் தவிர ராஜபக்ஷவை ஆதரித்த வாசு, விமல், டியு, திஸ்ஸவித்ரண, அதவுல்ல, மனமேந்திர, மௌலவி முபரக் போன்றவர்கள் வைத்திருந்த சம சமஜக் கட்சி, இலங்கை கம்யூனிச கட்சி, தேசிய ஐக்கிய முன்னணி, நவ சிஹல உறுமய, தேசிய காங்கிரஸ். மக்கள் கட்சி, போன்ற அவர்களது கட்சிகளினால் ராஜபக்ஷவுக்கு சில நூறு வாக்குகளையேனும் இந்தத் தேர்தலில் சேர்த்துக் கொடுக்க முடிந்ததா என்பது கேள்விக்குறி. எனவே ராஜபக்ஷ பெற்ற வாக்குகளின் 93 சதவீத்திற்கும் மேலான வாக்குகள் வரை சுதந்திரக் கட்சி வாக்குகள் என்பது தெளிவாகின்றது.
இந்த நிலையில் சுதந்திரக் கட்சியில் மைத்திரி, சந்திரிகா, மஹிந்த ஆகிய மூவரையும் சேர்த்து பொதுத் தேர்தலில் இறங்குகின்ற முயற்ச்சியில் அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் தற்போது ஈடுபட்டு வருகின்றார்கள் என்றாலும் இந்த விடயம் எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது இன்னும் தெளிவில்லாமல் இருந்து வருகின்றது. நுகேகொட கூட்டத்திற்குப் பின்னர் ராஜபக்ச விசுவாசிகள் தற்போது மிகுந்த சந்தோசத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு கூட்டை அமைத்துக் தனித்துக் களமறிங்கி மைத்திரி தலமையிலான சுதந்திரக் கட்சிக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கவும் முனையவும் கூடும். அப்படி அந்தக் கட்சி பிளவு பட்டால் சுதந்திரக் கட்சி பலயீனம் அடைய இடம் இருக்கின்றது.
கூட்டத்துக்கு வந்தவதுவர்களை வழக்கம் போல் 212 வசுவண்டிகளில் கொண்டுவந்து இறக்கினார்கள். மேலும் கடந்த ஜனாதிபத் தேர்தலில் இதற்கும் மேல் பெரும் எண்ணிக்கையில் ஆட்களை அழைத்து வந்து கூட்டம் போட்டு நாடகம் ஆடினார்கள் ஆனால் தேர்தல் முடிகள் எப்படி அமைந்திருந்த என்பதும் இந்த நாட்டு மக்கள் இன்னும் மறந்திருக்க நியாயமில்லை என்று அமைச்சர் ராஜித சேரத்ன நுகேகொட கூட்டம் தொடர்பில் கேள்வி எழுப்புகின்றார்.
இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் தொகை ஒரு இலட்சம் 50 ஆயிரம் என்றெல்லாம் ஏற்பாட்டாளர்கள் கணக்குப்போட்டுக் காட்டுகின்றார்கள். ஆனால் அங்கு கூடி இருந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் 35 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட தொகைதான் என்பது எமது கணக்கு. மேலும் 57 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒரு தலைவருக்காக விசுவாசம் தெரிவித்து நடக்கின்ற கூட்டத்தில் இந்தத் தெகையான அளவு மக்கள் வந்து கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது ஒரு பெரிய இசுவாக எவரும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று நாம் கருதுகின்றோம்.
இதே போன்ற கூட்டங்களை எதிர்வரும் நாட்களில் தெற்கில் கூட்டி அதன் மூலம் ராஜபக்ஷவின் பலத்தை காட்டி, சுதந்திரக் கட்சியை அச்சுறுத்தும் முயற்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப் பட்டுவருவது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்து வருகின்றது. கடந்த தேர்தல் முடிவுகளின்படி பார்க்கும் போது சுதந்திரக் கட்சியே இந்த நாட்டில் இன்று தனிப் பெரும் வாக்கு வங்கியை வைத்திருக்கின்ற கட்சியாக இருக்கின்றது. நாம் மேற் குறிப்பிட்ட புள்ளி விபரங்களின் படி சுதந்திரக் கட்சியுடன் போட்டியிட்டு சாதிக்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இல்லை என்றுதான் கூற வேண்டும்.
வருகின்ற பொதுத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு வழக்கம்போல் தனித்தே இந்தத் தேர்தலில் களமிறங்கும். அதே போன்று ஜேவிபியும் தனித்துக் களமறிங்கி தனது ஆதிக்கத்தைப் பாராளுமன்றத்தில் நிலை நாட்ட முற்படும். தற்போது நாட்டில் மக்கள் மத்தியில் அந்தக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கின்ற நல்லெண்ணம் இந்தத் தேர்தலில் அவர்களுக்கு வருகின்ற பொதுத் தேர்தலில் 10 - 12 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். பாராளுமன்றத்தில் அவர்களுக்கு இந்தளவு தொகையான உறுப்பினர்கள் கிடைத்தால் அவர்கள் அதனை வைத்துக் கொண்டு கனிசமான பங்களிப்பைச் செய்ய முடியும்.
மலையக தமிழ் குழுக்களான மனோ, திகா, ராதா போன்றவர்களும் தொண்டாவும் கூட ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து களமிங்குவதிலே ஆர்வமாக இருக்கின்றார்கள். தொண்டாவை இந்தக் கூட்டில் இணைத்துக் கொள்வதில் மைத்திரி அணியில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்தவர்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள். வருகின்ற பொதுத் தேர்தல் ஆறுமுகம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு பெரும் சவலாக இருக்கும்.
முஸ்லின் தனித்துக் கட்சிகளும் வழக்கம் போல் கரை சேர்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிப் படகிலேயே ஏறும். கிழக்கு முதல்வர் விடயத்தில் அம்பாறை மாவட்டத்தில் தலைமைத்துவத்திற்கு கடும் அதிர்ப்தி நிலை இருந்து வருகின்றது. மேலும் கொழும்பு, கண்டி போன்ற மாவட்டங்களில் இருந்து மு.கா. தலைவர் களமிறங்குவதற்கு அந்த மாவட்டத்திலுள்ள ஐ.தே.க. முக்கியஸ்தர்களும் அங்குள்ள சதாரண மக்களும் கூட தமது அதிர்ப்தியை வெளிப்படுத்துகின்ற நிலை இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. நாம் கூறுகின்ற இந்த நிலை வலுவானால் மு.கா. தலைவர் மட்டக்களப்பில் களமிறங்க அதிக வாய்ப்புகள் காணபப்டுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் குமார் குனரத்னம் தலைமையிலான ஜேவிபி மற்றுக் குழு துமிந்த நாகமுவ என்பவரைக் களமிறக்கி இன்று மக்கள் மத்தியில் மூக்குடைபட்டிருக்கினற்து. அவர் வெரும் 9900 வாக்குகளைப் பெற்றுக் ஒன்பதாவது இடத்திற்கு வந்தார். ஆனால் ஊர் பேர் தெரியாத சில்லறைகள் ஜனாதிபதித் தேர்தலில் அவரை விட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே வருகின்ற பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டி இருக்கின்றது. மைத்திரி மட்டும் இந்தத் தேர்தலில் களத்திற்கு வந்திருக்க விட்டால் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் வழக்கம் போல் படுதோல்வி அடைந்திருக்கும் என்பது எமது கருத்து.
.jpg)
Post a Comment