Header Ads



ஜனாஸா வீட்டுக்கு, துக்கம் விசாரிக்கச்சென்ற பிரதமருக்கு ஏற்பட்ட நிலைi..!

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா. இவரது இளைய மகன் அராபத் ரகுமான் கோகோ (வயது 44). மலேசியாவில் வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும், அரசியல் எதிரியின் மகன் என்பதை பொருட்படுத்தாமல் பிரதமர் ஷேக் ஹசீனா, டாக்காவில் உள்ள கலீதா ஜியாவின் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றார்.

ஆனால் அவரை கலீதா ஜியா சந்திக்கவில்லை. அவர், மகனின் மரண செய்தியால் உடல்நிலை பாதித்து, மாத்திரை கொடுத்து தூங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் தரப்பட்டது. இதனால் பிரதமர் ஷேக் ஹசீனா ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டது. இதுபற்றி கலீதா ஜியாவின் அந்தரங்க செயலாளர் ஷிமுல் பிஸ்வாஸ் கூறுகையில், “மகனின் மரணம் குறித்த தகவல் அறிந்ததும் அவரது உடல் நிலை பாதிப்புக்குள்ளானது. அவருக்கு மருந்து கொடுக்கப்பட்டது. அவர் தூங்கச்சென்று விட்டார். பிரதமரை இன்னொரு நாள் வருமாறு கேட்டுக்கொண்டோம்” என்றார்.

ஆனால் பிரதமர் ஷேக் ஹசீனாவை கலீதா ஜியா சந்திக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி ஷேக் ஹசீனாவின் தகவல் தொடர்பு ஆலோசகர் சோபன் சவுத்ரி, “பிரதமர் அனைத்து மரபுகளையும் மீறிதான் அங்கு சென்றார். பிரதமராக, ஒரு கட்சியின் தலைவராக, ஒரு தாயாக- மகனை இழந்த தாயை தேற்றுவதற்காக சென்றார். 5 நிமிடம் அங்கு நின்றுகொண்டிருந்தார். ஆனால் அவர் உள்ளே நுழையவே அனுமதிக்கவில்லை” என கூறினார்.

No comments

Powered by Blogger.