Header Ads



ரஷியாவின் நலனுக்காக குறைவாக சாப்பிடுங்கள், இதனை கடவுள் கொடுத்த சோதனையாக கருதுங்கள்

உக்ரைன் விவகாரத்தால் ரஷியா  மீது அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. உணவு பொருட்களின் ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளன. இதனால் ரஷியாவில் பொருளாதார பிரச்சனையும் அதன்  எதிரொலியாக கடும் உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.  இதனால் உணவுப்  பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

ரஷியாவின் நலனுக்காக மக்கள் குறைவாக  உணவு சாப்பிடுங்கள் என்று ரஷிய எம்.பி.க்களும், பழமைவாதிகளும்  பொதுமக்களுக்கு வேண்டுகோள்  விடுத்துள்ளனர்.  மேற்கத்திய நாடுகளின் உணவு வகைகளை விடுத்து நிறைய பீட்ரூட்  சாப்பிடுங்கள், ரஷியாவில் தயாரிக்கப்படும் பருத்தி துணிகளை அணியுங்கள். குறைந்த அளவு மின்சாரத்தை  குறைவாக பயன்படுத்துங்கள். இது நமக்கு கடவுள் கொடுத்த  சோதனையாக கருதுங்கள் என தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.