Header Ads



ஈரான் வெளியுறவு அமைச்சர், அமெரிக்க அமைச்சருடன் ஜெனீவா வீதியில் நடந்து சிக்கலில் மாட்டினார்

அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஜோன் கெர்ரியுடன் ஒன்றாக சேர்ந்து நடந்து செல்வது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் சரீபிடம் அந் நாட்டு பாராளுமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

ஈரானின் அணு விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி 14 ஆம் திகதி; நடந்த சந்திப்பின்போது சரீப், அமெரிக்க இராஜhங்க செயலாளருடன் ஒன்றாக சேர்ந்து nஜனீவா வீதியில் 15 நிமிடங்கள் வரை நடந்து சென்றார்.

இந்த 'இராஜதந்திர தவறு' குறித்து 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் சரீபிடம் விளக்கம் கேட்டிருப்பதாக ஈரானின் இர்னா செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. மிதவாத வெளியுறவு அமைச்சரிடம் விளக்கம் கேட்டு இந்த எம்.பிக்கள் மனுவில் கைச்சாத்திட்டுள்ளனர்.

"அணு விவகாரத்தில் மிகப்பெரிய சாத்தான்களின் எல்லைகளற்ற கோரிக்கைகள் மற்றும் நாசவேலைகளுக்கு மத்தியில் ஈரான் வெளியுறவு அமைச்சருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்த நெருக்கமும் இருக்கக் கூடாது" என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1979 ஈரான் இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் ஈரான் மற்றும் அமெரிக் காவுக்கு இடையில் எந்தவிதமான இராஜதந்திர உறவுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.