மைத்திரிபாலவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் - மூவர் காயம்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆனமடுவ நகர தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரி்வு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மூவர் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆனமடுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
.jpg)
Post a Comment