Header Ads



'ஹக்கீம், ரிசாட், பைசர்' பொதுபல சேனா பிரச்சினை ஏற்பட்டபோதே வெளியேறியிருக்க வேண்டும்

ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுத்தீன், பைசர் முஸ்தபா அல்ல எவர் எதிரணிக்கு சென்றாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இந்நாட்டு முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களிப்பதற்குத் தீர்மானித்து விட்டதாக சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத் தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீன், எம்.பி பைசர் முஸ்தபா போன்றோர் பொதுபல சேனா காரணமாகவே அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாகக் கூறுகின்றனர்.

அப்படி இவர்கள் வெளியேறுவதென்றால் பொதுபல சேனா பிரச்சினை ஏற்பட்ட போதே வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அப்படி செய்ய இல்லை.

பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்குப் பிரச்சினை ஏற்பட்ட போதும் கூட இவர்கள் அரசாங்கத்துடனேயே இருந்தார்கள். இறுதித் தறுவாய் வரும்வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தின் வசதி வாய்ப்புக்களை முழுமையாக அனுபவித்து விட்டே இவர்கள் எதிரணிக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் சமூக நலனையோ, நாட்டின் நலன்களையோ கருத்தில் கொண்டு எதிரணிக்கு செல்லவில்லை. மாறாக தமது சொந்த நலன்களுக்காகவே அங்கு சென்றுள்ளனர். இதனை இந்நாட்டு முஸ்லிம்கள் நன்குணர்ந்து கொள்ள வேண்டும்.

அதன் காரணத்தினால் இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவதற்காக எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அமோக வெற்றிபெறச் செய்வதற்கு இந்நாட்டு முஸ்லிம்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று குறிப் பிட்டார்.

8 comments:

  1. What about you...? why didn't you come out when incident happened for muslims...? first you must come out

    ReplyDelete
  2. காதர் மச்சான்! உங்களுக்கு என்ன நடந்தது .., நீங்களும் பொதுபலசேனா பக்கம் போய் சேர்ந்து கொண்டால் நல்லது ..,

    ReplyDelete
  3. இது உங்கள் குறுகிய சிந்தனை. பொது பல சேனாவின் பிரச்சினை நேரத்தில் இந்த முஸ்லிம் தலைவர்கள் விலகி இருந்தால் அது அந்த இனவாதிகளுக்கு ஒரு உட்சாகத்தை கொடுத்திருக்கும். அடுத்தது அரசிலிருந்துகொண்டு குரல் கொடுக்க ஒருவரும் இல்லாதிருக்கும். எல்லாம் நல்லதுக்கு தான்.

    அப்படியாயின் நீங்கள் ஏன் நீங்கள் இன்னும் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு இருக்கிரிறீர்கள்.

    பள்ளிகளை உடைக்காத ஒரே ஒரு அரசாங்கம் மகிந்தவின் அரசு எண்டு அறிக்கை விட்டவர் தானே நீங்கள்.

    ReplyDelete
  4. சுபஹானல்லா அவன் படைத்த படைப்புகள் எத்தனையோ அதில் இப்படிப்பட்ட படைப்புகளையும் படைத்துள்ளான், முஸ்லிம்கள் எல்லோரும் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை நன்றாக உணர்ந்துள்ள ஒரு மனிதர், இவருக்கு அறிவில்லை என்பதை குறிப்பிட்டு காட்டுகின்றாரா? அல்லது இவர் சொல்வதை ஜனாதிபதி நம்பும் அழவுக்கு முட்டாள்தனமானவர் என்று எண்ணியுள்ளாரா? ஆனால் அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாது மக்கள் சிந்திக்கத்தெரியாதவர்கள் என்று. இதுபோன்ற சில அடிவருடிகள் இருகின்றார்கள் அவர்களுடன் சில புதிய அடிவருடிகளும் சேர்ந்துள்ளார்கள். கடந்த காலத்தில் பொது பலசேனவையும் மகிந்த ஆட்சியையும் குறைகூறியவர்கள் இன்று சில பல பொதிகளுக்குள் சிக்குண்டு அதே மகிந்தவுடன் கைகோர்த்துள்ளார்கள் அது மிகவும் ஆச்சர்யம் ஆனால் வேதனை. வெற்றி தோல்வி ஒரு புறம் இருக்க. (யாரை பற்றி சொல்கின்றோம் என்று தெரியவேண்டுமா> உமது வலக்கைப்பக்கம் பாருங்கள் முஸ்லிம் உலமா கட்சியின் விளம்பரத்தை சிவப்பு தொப்பியுடன் இருக்கும் இந்த மானங்கெட்ட உல மாவை.)

    ReplyDelete
  5. His behaviors look like in " சின்ன தம்பி" film one psycho telling every time "எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்" But he is telling " நானொரு முட்டாள் நானொரு முட்டாள்"

    ReplyDelete
  6. Chumma vidunga cader kaakava.avar tata bus import panni nalla panam earn pannittar.innum aasai.panam yaarai thaan vittudhu.jayawewa gampola cader

    ReplyDelete
  7. Very simple Answer for your Question Cader..................
    Hakeem, Risard and Faizer have come out now because their brains are working. You do not come out because you do no have a brain.

    ReplyDelete
  8. You are a Muslim too. Why didn't you raise the voice against BBS. You knew well that this group is very dangerous to all. Nevertheless, your boss was supporting that. Why don't you resign & express your anger?

    ReplyDelete

Powered by Blogger.