Header Ads



'மைத்திரிக்கு வழிகாட்டும் சபை' ரிஷாட் பதியுத்தீன் உள்ளே, ரவூப் ஹக்கீம் அவுட்..!

-நஜீப் பின் கபூர்-

இலங்கை அரசியலில் கடந்த காலங்களில் நடந்த அடாவடித்தனங்கள் ஊழல், மோசடி, குடும்ப அட்டகாசங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு அரச நிருவாகத்தையும், குறிப்பாக அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் போன்றவர்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் மற்றும் 100 நாள் வேலைத் திட்டம் என்பவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கும் அதனைச் செவ்வனே வழி நடாத்துவதற்கும் என இன்று ஜனாதிபதி மைத்திரி தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் குழுவில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்வாங்கப் பட்டிருக்கின்றார்கள.; ஆனால் இந்தக் குழுவில் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் உள்வாங்கப்படவில்லை. மைத்திரியை முஸ்லிம்கள் முழுமையாக ஆதரிக்கத் துவங்கிய பின்னணியில் வேறுவழியின்றி மைத்திரி தரப்பிற்குத் இவர்கள் தாவிய விவகாரம் இதில் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருத இடமிருக்கின்றது. 

மு.கா.வோ ரவூப் ஹக்கீமோ மைத்திரி பக்கம் வந்திருக்க விட்டாலும்  இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் இந்த அளவு வாக்குகளை  மைத்திரிக்கு வழங்கி இருப்பார்கள் என்பது ஒரு சிறு பிள்ளை கூட அறிந்திருந்த விடயம்.

மு.கா வரவு இந்தத் தேர்தலில் எந்தத் தாக்கங்களையும் முஸ்லிம்கள் மத்தியில் செலுத்தவில்லை என்பதுடன் மு.கா. முக்கியஸ்தர்கள் பலர் இந்தத் தேர்தலில் அவர்களின் பையத்துக்கு (இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும்) முறனாக ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி மூக்குடைபட்டிருந்தார்கள். இவர்களைத் தலைமைக்குக் கட்டுப்படுத்த முடியாதிருந்தது என்பதும் முஸ்லிம்களுக்குத் தெரியும். 

எனவேதான் இன்று கொடும்பாவி எறித்துக் கொண்டாட்டங்கள் கிழக்கில் நடந்து கொண்டிருக்கின்றது. அத்துடன் தலைவருக்கு மைத்திரி வெற்றியில் நிறையவே சந்தேகமும் மஹிந்த வெற்றியின் மீது இனம்புரியாத ஒருவகை அச்சமும் பயமும்   கடைசி நேரம் வரை இருந்தது, என்பது கூட இருந்தவர்கள் நமக்குத் தருக்கின்ற தகவல்கள் மூலம் தெரிகின்றது. 

எனவே இந்த உயர் சபையில்  மொத்தம் ஏழு பேர் உள்வாங்கப் பட்டிருக்கின்றார்கள். அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு.

1. ஜனாதிபதி மைத்திரிபல சிரிசேன
2. பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ
3. ஜனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேக்க
4. ஜே.வி.பி.தலைவர் அணுரகுமார திசாநாயக 
5. ஜாதிக ஹெல உறுமய செயலாளர் பாட்டலி சம்பிக்க
6. தமிழர் விடுதலைக் கூட்டணி சிரேஸ்ட தலைவர் சம்பந்தன்
7. அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீன்

என்போர் இந்த உயர் சபையில் இடம் பெற்றிருக்கின்றார்கள். இந்த சபையின் முதல் அமைர்வு  மாலை (15.01.2005) ஜனாதிபதி மைத்திரி தலைமையில் கொழும்பில் நடந்திருக்கின்றது. 100 நாள் வேலைத் திட்டம் முடியும்வரை பிரதி வாரம்தோறும் இந்த அதி உயர்மட்டக் குழு கூடி நிலமையை அவதானித்து அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

4 comments:

  1. முஸ்லிம் மக்களின் மனமாற்றம் முஸ்லிம் எம்பிக்களின் கட்சி தாவலுக்கு முன்பே எடுக்கப்பட்டது .இதில் ஒருவரை மட்டும் குறைகாண்பது எந்த வகையில் நியாயம்

    ReplyDelete
  2. அமைச்சர் ரிசாதுக்கு கூஜா தூக்கி மற்றவர்களை மட்டந்தட்டுவதில் இந்த அலம்பலுக்கு என்ன ஒரு ஆர்வக்கோளாறு.இப்படியான ஊது குழல்களுக்கு எம்மத்தியில் பஞ்சமேது??ஒருவேளை நக்கிதின்பவரோ தெரியவில்லை.ரவுப் ஹகீம் வருவதற்கு எத்தனை நாட்களுக்கு முன்பு ரிசாத் தாவினார் என்றும் கூறியிருக்கலாமே.ஹுனைஸ் மாறும்போது அவரை துரோகியாக கூறிய உங்களைப்போன்றவர்கள் ரிசாத் தாவும்போது தேசியத்தலைவராக கூச்சல் இட்டதும் நீங்களே

    ReplyDelete
  3. hakeem oru mahitha THAASAN enpathu avar,avarukku eluthiya LOVE letter moolam vilangkavillayaa?haakeemai vida risaatha mealthaan but naan hakeemai aathariththavanthaan,

    ReplyDelete
  4. When Mslims and their reiigious rights were questioned by the BBS during the kast regime these Muslim politicians were in the cabinet supporting all nonsense against the Muslims of the country! Highly inefficient, unreliable and self centered .

    ReplyDelete

Powered by Blogger.