யோசித்த ராஜபக்ஷவுக்கு அன்பளிப்பாக வழங்கிய, விமானத்தை உருவாக்கியவரின் உரிமைகோரல்
நாராயண்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறியவகையான விமானத்தை தாமே உருவாக்கியதாக, சிலாபம் - பங்கதெனியா – தெமடபிட்டியவைச் சேர்ந்த ஹெமிலட் மாடிஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொறியியலாளரும், முன்னாள் விஞ்ஞானியுமான ரே விஜேவர்தனவின் கொழும்பில் உள்ள வீட்டில் வைத்து தாம் இதனை உருவாக்கியதாக அவர் கூறியுள்ளார்.
இதனைத் தாம் சிலாபம் - களுத்துறை ஆகிய பிரதேசங்களின் வான்பரப்பில் செலுத்தி இருப்பதாகவும் அவர் SFM செய்திப்பிரிவுக்கு கூறினார்.
எனினும், தனியார் விமானங்கள் செலுத்தப்படுதவதற்கு அரசாங்கம் தடை விதித்ததை அடுத்து குறித்த விமானத்தை தாம் விமான பயிற்சி பாடசாலையிடம் கையளித்ததாக அவர் கூறியுள்ளார்.
இதேநேரம் தாம் இந்த சிறிய விமானத்தை, முன்னாள் ஜனாதிபதி யோசித்த ராஜபக்ஷவுக்கு தாம் அன்பளிப்பாக வழங்கியதாக, திரைப்பட இயக்குனர் சந்திரன் ரத்னம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ம் அண்டு ஜனவரி மாதம் தாம் இதனை அவருக்கு அன்பளிப்பு செய்ததாக அவர் sfm செய்திப்பிரிவுக்கு கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காவற்துறையின் அவசர பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நாராயண்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தில் வைத்து இந்த விமானம் மீட்கப்பட்டிருந்தது.
இரண்டு பேர் மாத்திரம் பயணிக்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Post a Comment