Header Ads



சிவில் விமான சேவை அதிகார சபையில் நடைபெற்ற கூத்துக்கள்..!

சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பல அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த 04 ஆண்டுகளிலும் 15 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

இதனைவிட மத்தளை விமான நிலையத் திறப்பு விழாவில் பங்குபற்றிய அதிகார சபையின் அதிகாரிகள் சிலரின் இருநாள் ஹோட்டல், உணவு, பானம் ஆகியவற்றுக்கு 07 இலட்ச ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் அரச பணத்தை நாசம் செய்தமை தொடர்பாக பதில் வழங்குமாறு அரச கணக்காய்வாளர் நாயகம் பணிப்பாளர் நாயகத்தைக் கேட்டுள்ளார்.

தன்னிச்சையாக பணிப்பாளர் நாயகம் செயற்பட்டுள்ளார். அரச சுற்றறிக்கைகள், உத்தரவுகள் கருத்திற்கொள்ளப்படவில்லை.

தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளின் வெளிநாட்டு விஜயங்களுக்கான தகுதியான காரணத்தைத் தெரிவிக்காது.

அமைச்சு செயலாளரின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விஜயங்களில் பங்குபற்றும் சகல அதிகாரிகளும் வெளிநாடுகளில் நடந்த கருத்தரங்குகள் மூலம் தாம் பெற்ற நன்மைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் எவரும் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவில்லையென தெரிவித்துள்ளது.

அதிகார சபைக்கு நிரந்தரம் கட்டடம் பெறுதல் உட்பட மேற்கொள்ளப் படவேண்டிய பல விடயங்கள் இருந்தும் அதிகாரிகள் சிலருக்காக கோடிக்கணக்கான அரச நிதி தாறுமாறாகச் செலவிடப்பட் டுள்ளது. இந்த அதிகார சபையின் ஊழல் மோசடிகள் ஊடகங்களில் பிரசுரமாவதைத் தடுக்க அதிகார சபை 80, 000 ரூபா சம்பளத்தில் ஒருவரைச் சேவையில் நியமித்துள்ளது.

பத்திரிகை நிறுவனங்களுக்குச் சென்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து பல செய்திகளை இந்த அதிகாரி பிரசுரம் பெறாமல் தவிர்த்தும் வந்துள்ளார்.

No comments

Powered by Blogger.