Header Ads



ஜனாதிபதி மைத்திரி 4 வருடங்கள் போதும் என்றார், பின்னர் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டது

நிறைவேற்று ஜனாதிபதி பதவி காலத்தை 6 வருடத்தில் இருந்து 5 வருடங்களாக மட்டுப்படுத்துவதற்கு அவசியமான திருத்தங்கள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை வரவேற்கும் நிகழ்வொன்று இன்று பொலநறுவையில் தோப்பாவௌ விளையாட்டு அரங்கில், அரசாங்க பணியாளர்களால் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் அமைப்பு  தொடர்பான நிபுணர்களால், புதிய திருத்தம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி ஒருவருக்கு இருக்கின்ற வரையறை அற்ற அதிகாரங்களை அகற்றி நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கி அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும் பணியகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பான சந்திப்பொன்றில் நேற்று முன்தினம் கலந்து கொண்டேன்.

எனது ஆட்சி காலம் 6 வருடங்களாக வரையறைக்கப்பட்டுள்ளது. அதனை 4 வருடங்களாக குறைக்குமாறு கோரியிருந்தேன்.

ஆனால், 4 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல்களை நடத்துவது நாட்டிற்கு ஏற்புடையது அல்ல என அவர்கள் தெரிவித்தனர்.

எப்படியிருப்பினும், எனது வற்புறுத்தலுக்கு அமைய 5 வருடங்களாக மட்டுப்படுதுவதற்கு அவர்கள் இணங்கினர்.

No comments

Powered by Blogger.