மைத்திரியின் உணர்ச்சிபூர்வமான பேச்சு..!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் தான் அடுத்த வரும் சில தினங்களில் கடும் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்க நேரிடும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பக்கமுன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
எங்கள் பிணங்கள் மேல் இருந்து கொண்டு மகிந்த ராஜபக்ஷ வன்முறையிலும் சண்டித்தனத்திலும் வெற்றி பெற முயற்சித்தால் அது எப்போதும் நடக்காது. எங்களை கொன்று விட்டு தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் அது வரலாற்றில் எழுதப்படும்.
ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் ஜனாதிபதி, இராணுவ தலைவர் ஆகியோரை கொலை செய்து விட்டு மகிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்தார் என்று வரலாற்றில் எழுப்படும்.
எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நாங்கள் எமது உயிர்கள் குறித்து மிக அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.
தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு இதுதானா ஜனநாயகம் என்று கேட்டேன். தாக்குதல்கள் நடத்தும் போது பொலிஸாரும் அதிரடிப்படையினரும் எதும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Dear Mithri your safety and security are from God,so you will be fine.
ReplyDelete